பக்கம்:கற்பக மலர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவன் திருவடி 35

உலகுக்கு முதல்வன் இறைவனே என்பதை உணர்த்த வந்தவர், அதற்கு ஏற்றவாறு அந்தத் தன்மை யைப் புலப்படுத்தும் ஆதி பகவன்’ என்ற பெயரால் கடவுளேக் கூறினர். அது போலவே கல்வியின் பயன் கடவுளே வழிபடுதல் என்பதைச் சொல்லும் அடுத்த குறளில் வாலறிவன்’ என்ற தொடரால் இறைவனேக் குறித்தார்.

கண்ணன், எழுத்துக்களில் நான் அகரமாகின்றேன்’ என்ருன் கீதையில். 'அகர முதலானே அணி ஆப்பனும் ரானே' என்று சம்பந்தரும், 'ஆனத்து முன்னெழுத்தாய் நின்ருர் போலும்’ என்று அப்பரும், அகரம் முதலின் எழுத்தாகி நின்ருய்' என்று சுந்தரரும் பாடியருளியிருக் கிருர்கள். முதற்குறள் இவற்றையெல்லாம் நினைக்கச் செய்கின்றது. -

3 ممسنی ها ن: نگ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/34&oldid=553245" இலிருந்து மீள்விக்கப்பட்டது