பக்கம்:கற்பக மலர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிந்த பயன்

திருவள்ளுவர் கடவுளே இறைவன், இறை என்று, கூறுகின்ருர், இறை என்பதற்குத் தங்குதல் என்று பொருள். எங்கும் நிறைந்திருப்பது கடவுளின் தன்மை யாதலின் இறை என்றும் இறைவனென்றும் வழங்கு வார்கள். -

'அகர உயிர்போல் அறிவாகி எங்கும்

நிகரில் இறைகிற்கும் நிறைந்து’’ என்ற சாத்திரப் பாடல் இந்தக் கருத்தைத் தெளி வாக்குகிறது.

இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள், 5) பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவன் அடிசேரா தார் (குறள், 10)

என்னும் இரண்டிடங்களில் இறைவன் என்று சொல்கிருர் வள்ளுவர். இவை கடவுள் வாழ்த்தில் வருவன. பின்னே பொருட்பாலில்,

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறைஎன்று வைக்கப் படும் (குறள், 386) என்பதில் இறை என்று கடவுளேக் கூறுகிருர்.

கடவுள் வாழ்த்தில் இறைவனேக் குறிக்கும் தொடர் களால் அவனுடைய இயல்புகள் புலனுகின்றன. உலகுக்கு ஆதியாக நிற்பவன், துTய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/35&oldid=553246" இலிருந்து மீள்விக்கப்பட்டது