பக்கம்:கற்பக மலர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிந்த பயன் 27

அறிவை யுடையவன், கினேக்கும் அடியவர்களுடைய உள்ளக் கமலத்தில் செல்பவன், விருப்பு வெறுப்பு இல்லாதவன், தனக்கு ஒப்பு இல்லாதவன், அறத்தை நடத்துகிறவன், அழகிய தண்மையை உடையவன், எட்டுக் குணங்களே உடையவன், அவனுடைய புகழே உண்மையான புகழ், அவனே எண்ணி வாழும் நெறியே பொய் தீர்ந்த மெய்யான வழி என்ற செய்திகளே அவற்றைக்கொண்டு உணரலாம். - -

கடவுள் வாழ்த்தின் முதல் இரண்டு செய்யுட் களும் கல்வியின் தொடக்கத்தையும் முடிவையும் சுட்டிக் காட்டுகின்றன. முதல் குறளில், கல்வி கற்பவன் எடுத்தவுடன் எந்த எழுத்தைத் தெரிந்து கொள்வானுே, அதையே உவமை யாக்கிக் கடவுளின் முதன்மையை எடுத்துரைத்தார். கல்வியில் எந்த நிலையில் கின்ருலும் அகரத்தைத் தெரிந்துகொண்டே பின்பு மற்றவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அகரத்தை மட்டும் தெரிந்து கொண்டவன்கூட அறியும் உவமை இது.

கல்வியின் தொடக்கத்தை உவமை வாயிலாக முதல் குறளில் அமைத்தவர், அடுத்த குறளில் கல்வியின் முடிவைச் சுட்டுகிரு.ர்.

கற்றதல்ை ஆய பயன் என்கொல் வாலறிவன்

நற்ருள் தொழாஅர் எனின்?

கற்று முடித்துவிட்டோம் என்ருல் அதற்குரிய பயனே அடைய வேண்டும். இறைவன் திருவடியைத் தொழும் அன்பு உண்டாவதே கல்விக்குப் பயன் என்கிறர். பின்னே, கல்வி என்னும் அதிகாரத்தில் கற்பதல்ை அறிவு ஊறும் என்று சொல்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/36&oldid=553247" இலிருந்து மீள்விக்கப்பட்டது