பக்கம்:கற்பக மலர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கற்பக மலர்

தொட்டனத் தூறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத் துாறும் அறிவு. (396)

படிக்கப் படிக்க அறிவு ஊறி வருமாம். நன்ருகப் படித்தவனுக்கு அறிவு முழுமையாக ஊறும். கற்றதற்குப் பயன் அறிவு பெறுதலானல், அந்த அறிவுக்குப் பயன் இறைவனைத் தொழுதல். கற்றவன் அறிவுடையவ னதலால் அவன் அறிவுடையவர்களிடம் மதிப்பு வைத்து ஒழுகுவான். எல்லா அறிஞர்களும் சிற்றறிவுடையவர் களே; இறைவன் ஒருவனே முற்றறிவுடையவன்; சர்வஞ்ஞன். கல்வியினல் அறிவு பெற்ற மனிதன், அறிவுமயமாக உள்ள ஒருவனுடைய பெருமையை உணர்ந்து தொழுவதுதான் முறை. கற்று அறிவு பெற்றவல்ை தொழுவதற்குரியவன் என்ற பொருத்தத் தைக் காட்ட, வாலறிவன் என்ற பெயரைச் சொன்னர்.

அறிவு இரண்டு வகைப்படும்; நூலறிவு என்றும் வாலறிவு என்றும் அவற்றைக் கூறுவர். இவற்றைப் பரோட்ச ஞானம், அபரோட்ச ஞானம் என்றும், அபர ஞானம், பரஞானம் என்றும் கூறுவதுண்டு. நூலறிவு முற்றுப் பெற்ருலும் மெய்யுணர்வு பெருவிடின் பயன் இல்லை. - .

இப்போதெல்லாம் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறவர்கள் ஒரு சான்றிதழ் வாங்குகிருர்கள். அதை, உயர்நிலைப் பள்ளியை விடும் சான்றிதழ் (Secondary School Leaving Certificate) as orgy சொல்வார்கள். பள்ளிக்கூடத்தில் கல்வியை நிறைவேற்றி அதனை விடும் கிலேயில் இருப்பவன் மாணவன். ஆனல் பள்ளிக்கூடத்தை விடுவதை விடக் கல்லூரியில் நுழைவதுதான் சிறப்பானது. ஆதலால் கல்லூரிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/37&oldid=553248" இலிருந்து மீள்விக்கப்பட்டது