பக்கம்:கற்பக மலர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ & கற்பக் மலர்

மெய்ப் பொருளே உணர்ந்த ஞானியரும் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்கள் தாமே? இறைவனுக்கு இது ஒரு சிறப்பா? என்று கேட்கலாம். இருவர் இயல்பிலும் வேறுபாடு உண்டு. ஞானியர் வேண்டுதல் வேண்டாமை அற்றவர்கள்; அதாவது அவர்கள் ஞானம் பெறுவதற்கு முன் நம்போல் வேண்டுதலும் வேண்டாமையும் உடை யவர்களாக இருந்து, பின்பு ஞானம் பெற்று அவற்றினின் றும் நீங்கினவர்கள். இறைவனே இயல்பாகவே அவ் விரண்டினின்றும் விலகி நிற்கிறவன்; அவை இல்லா தவன். . x .

யார் வந்தாலும் அவர்களேக் காப்பாற்றும் பேரருள் உடையவன் அவன். அவனே அணுகிப் பணிந்தவர்கள் அவனுடைய அடியார்கள். அல்லாதவர்கள் அவனுக்குப் பகைவர்கள் அல்ல; வேண்டாதவர்கள் அல்ல. அவர்களும் அடியார்களாகும் வாய்ப்பை உடையவர்கள். அவன் அடியைப் பற்றில்ை அவர்களுக்கு இடும்பை திரும்.

இறைவன் அடி சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல என்று சொல்கிருர் யாண்டும்-எவ்விடத்தும், எக்காலத்தும். இறைவன் அடியைப் பற்ருகப் பற்றின வர்கள் மறுமையில் முத்தியின்பத்தை அடைவார்கள் என்று சொல்பவர்கள் பலர். அது மட்டும் அன்று; இம்மையிலும் இடும்பை அடைய மாட்டார்கள் என்று இந்தக் குறள் குறிக்கிறது. யாண்டும் என்பது இம்மை மறுமை என்னும் இரண்டிடத்திலும் என்ற பொருளே உடையது. - - .

இறைவனுடைய அடியைப் பற்றினவர்களுடைய மனம் துரியதாக இருக்கும். அவர்கள் ஆருயிர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/47&oldid=553258" இலிருந்து மீள்விக்கப்பட்டது