பக்கம்:கற்பக மலர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடும் பை இலா வாழ்வு 89. பால் அன்புள்ளவர்களாக வாழ்வார்கள். இறைவனிடம் மட்டும் அன்பு செய்து உயிர்களிடம் அன்பில்லாதவர்கள் உண்மை அன்பர்கள் ஆவதில்லை. ஒரு செல்வரிடம் அன்பு வைப்பவன் அவருடைய குடும்பத்தினரிடமும் அன்பு: வைத்தால்தான் செல்வருடன் நெருங்கிப் பழக முடியும்; அவருடைய முழு அன்புக்கும் உரியவகை முடியும். அவருடைய மகனேப் புறக்கணித்துவிட்டு அவரிடம் சென்ருல், நம் மகனே இவன் புறக்கணிக்கிருன்’ என்ற எண்ணம் உள்ள அவர் முழு அன்பைக் காட்டமாட்டார். இறைவனும் தன்னுடைய குழந்தைகளாகிய உயிர்க் கூட்' டத்தினிடம் அன்பு இல்லாதவர்களே அடியவர்களாக ஏற்றுக் கொள்ளமாட்டான். -

'ஈசனுக்கன் புடையார்கள் எவ்வுயிர்க்கும் அன்புடையார் ’’

என்பர் ஒரு புலவர்.

ஆகவே, இறைவனிடம் அன்புள்ளவர்கள் யாவரிடமும் அன்பு வைத்துப் பழகுவார்கள். அதன் விளைவாக எல்லோரும் அவர்களிடம் அன்பு பாராட்டுவார்கள். எல்லோருட்ைய அன்புக்கும் ஆளாக இருக்கும் அவர் களுக்கு வேண்டிய கலன்கள் அவ்வப்போது கிடைத்து. வரும். அதல்ை அவர்களுக்குக் குறைவற்ற வாழ்வு அமையும். இவ்வுலக வாழ்வு துன்பமாகத் தோன்ருமல் இன்பமாகவே இருக்கும், அதனால்தான் ஞானசம்பந்தர்,

"மண்ணில்கல் லவண்ணம் வாழலாம் வைகலும்’ என்று பாடினர். அப்பரோ,

'இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை’

என்ருர். சுந்தரமூர்த்திகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/48&oldid=553259" இலிருந்து மீள்விக்கப்பட்டது