பக்கம்:கற்பக மலர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 + ກໍ່ບ ່ . ຄ ກໍ່

'இம்மை யேதரும் சோறும் கூறையும்

ஏத்த லாம் இடர் கெடலுமாம்’

என்ருர்.

மறுமையில் இடும்பையில்லாத இன்பநிலை உண்டாகும் என்பதோடு, இம்மையிலும் இடும்பையின்றி வாழலாம் என்பதுதான் இந்த நாட்டுச் சமயங்களின் துணிபு. “இங்கே எப்போதும் துன்பத்தை அநுபவித்தால் அங்கே எப்போதும் இன்பத்தை நுகரலாம்” என்று சிலர் கூறுவ துண்டு. வள்ளுவர் அப்படிக் கூறவில்லை. இறைவன் l!!. சேர்ந்தவர்கள் இம்மையிலும் மறுமையிலும்|مئی இடும்பையின்றி வாழ்வார்கள் என்பதே அவர் கருத்து.

இறைவனுக்கு அடியவராக வேண்டுமானல் அதற்கு நாள், நேரம் பார்க்க வேண்டாம். நாம் இதுகாறும் அன்பு செய்யாமையால் அவன் நம்மைக் கவனிக்க மாட்டான் என்று எண்ணவும் வேண்டாம். அவன் நம்மிடம் வெறுப்பு உள்ளவன் அல்லன். வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவனதலின் நம்முடைய முயற்சியைக் கண்டு, பழைய கிலேயை எண்ணிப் புறக்கணிக்காமல், அருள் செய்வான்.

நாம் இப்போது இடும்பைகளினிடையே வாழ்கிருேம், விருப்பு வெறுப்புக்களால் நமக்கு உண்டாகும் துன்பங் களுக்கு அளவு இல்லை. விருப்பு வெறுப்பை நீக்கிவிட்டு மெய்ஞ்ஞானம் பெற்ருல் அந்த இடும்பைகள் நீங்கும். அதற்கு என்ன வழி? இயல்பாகவே விருப்பு வெறுப்புக்கள் இல்லாதவனுடைய அடியைத் தியானித்து அன்பு செய்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/49&oldid=553260" இலிருந்து மீள்விக்கப்பட்டது