பக்கம்:கற்பக மலர்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு ை

எழுத்தாளர்கள் ஒன்று கூடித் தங்கள் நூல்களேத் தாங்களே வெளியிட்டுக் கொள்ளத்தக்க வகையில் ஒரு நிறுவனம் இருந்தால், பல நல்ல வெளியீடுகளைக் கொணரவும் எழுத் தாளர்களுக்கு நலம் செய்யவும் இயலும் என்ற எண்ணத்தில்ை சில எழுத்தாளர்கள் சேர்ந்து தொடங்கியது தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம். நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ் மக்களிடையே இப்போது மிகுதியாக உண்டாகி வளர்ந்து வருகிறது. பல பல வெளியீட்டாளர்கள் புத்தகங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறர்கள். அதனல் ஒரளவு எழுத்தாளர் சிலருக்கு ஊதியம் கிடைக்கிறது. ஆயினும் எழுத்தாளர்களின் பொருளாதார கிலே இன்னும் உயரவில்லை. பல நல்ல எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களே வெளியிட வாய்ப்பு இல்லாமல் திண்டாடுகிரு.ர்கள். கிடைக்க வேண்டிய ஊதியம் கிடைக்காவிட்டாலும் அவசியத்தை முன்னிட்டுப் பலர் கிடைத்ததைப் பெற்றுப் புத்தகங்களே விற்று விடுகிருர்கள்.

இவ்வாறு உள்ள கிலேயை ஒரளவேனும் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுந்தது இந்தக் கூட்டுறவுச் சங்கம், வேறு மொழியாளர்களிடையே இத்தகைய சங்கம் இருப்ப தாகவும் அதனால் எழுத்தாளர்களுக்கு கலன் உண்டாவதாகவும் தெரிய வருகிறது.

கூடிய வரையில் நல்ல நூல்களே வெளியிட வேண்டும் என்பது இந்தச் சங்கத்தின் கொள்கை. இதற்கு அரசியலாரின் உதவியும் பொது மக்களின் உதவியும் இன்றியமையாதவை. ஏழைகளாகிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களேத் தங்கள் பொருளைக் கொண்டே வெளியிடுவது என்பது இயலாத காரியம். ஆகவே இந்தக் கூட்டுறவுச் சங்கத்துக்கு எத்தனேக்கு எத்தனே அரசினருடைய ஆதரவு இருக்கிறதோ, அத்தனைக்கு அத்தனே எழுத்தாளர்களுக்கு ஆக்கமும் தமிழ் மக்களுக்கு நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/5&oldid=553215" இலிருந்து மீள்விக்கப்பட்டது