பக்கம்:கற்பக மலர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடும்பை இலா வாழ்வு - 41

தான் வழி. இந்தக் கருத்தை இந்தக் குறள் புலப் படுத்துகிறது. -

இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதைப் பிறரும் கூறியுள்ளனர். - ‘'வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை’’ என்பது அப்பர் தேவாரம். சைன நூலாகிய திருக்கலம் பகத்திலும், - ‘'வேண்டுதல் வேண்டாமை இல்லாத வீரன்’

என்ற தொடர் வருகிறது.

x

உலகில் துன்பப்படும் மக்கள், 'கடவுள் கண் திறந்து பார்க்கவில்லையே!” என்று வருக்தி உரைப்பதை நாம் கேட்டிருக்கிருேம். தமக்கு வேண்டியவர்களுக்கு வேண்டியவற்றை அளித்து நலம் செய்வதும் மற்றவர்களேக் கவனிக்காமல் இருப்பதும் மனிதர்களுக்கு இயல்பு. 'இறைவனும் அப்படிச் சிலரிடம் மட்டும் விருப்புடையவனுக இருக்கிருன் போலும் என்ற நினைவு வன்மையில்லாத உள்ளத்தில் உண்டாகும்.

இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். எல்லோரும் அவனுக்கு ஒரு கிலேயில் இருப்பவர்களே. குளிர்காலத்தில் ஒரிடத்தில் தி மூட்டியிருக்கிருர்கள். அதனிடம் யாராக இருந்தாலும் வந்து குளிர் காயலாம். அது எல்லோருக்கும் பொதுவானது. ஆலுைம் அதன் அருகில் சென்று அமர்ந்தால்தான் குளிர் காய முடியும். குளிரைப் போக்கும் ஆற்றல் அந்த நெருப்புக்கு இருக்கிறது. குளிர்கிறவர்கள் பக்கத்தில் அது போய் நிற்காது. குளிருடையவர்கள் தாமே அதன் அருகில் சென்று குளிர் காய வேண்டும்.

கற்பக-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/50&oldid=553261" இலிருந்து மீள்விக்கப்பட்டது