பக்கம்:கற்பக மலர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடும்பை இலா வாழ்வு 43

'கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்

துறைதரு கற்பகத்தை எங்கும் ஏத்திகின் றின்புறும் அடியரை

இடும்பைவக் தடையாவே' என்ற திருஞானசம்பந்தர் திருப்பாட்டிலும், அடி சேர்ந்த அடியரை இடும்பை வந்து அடையா என்ற கருத்தைக் காணலாம்.

'யாண்டும் இடும்பை இல' என்ற தொடருக்கு இன்னும் ஒரு வகையில் பொருள் கொள்ளலாம். ‘அடிசேராதாருக்கு இடும்பை உண்டாகும் இடம் எதுவா லுைம் அங்கும் அடியார்களுக்குத் துன்பம் உண்டாகாது” என்ற கருத்தையும் அத்தொடரால் பெறலாம். -

மற்றவர்களுக்கு இவ்வுலகம் துன்பத்தைத் தருவ தாகத் தோற்றுகிறது. அடியார்களுக்கோ இவ்வுலகம் இன்பம் தருவதாக அமைகிறது.

'மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே' என்று பாடுவார் அப்பர்.

"தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்

திருகடம் கும்பிடப் பெற்று. மண்ணிலே வந்த பிறவியே எனக்கு

வாலிதாம் இன்பமாம்” என்று சுந்தரர் கூறியதாகச் சேக்கிழார் பாடுவார். அவர்களுக்கு இறைவன் அடிசேர்ந்த திறத்தினல், இவ்வுலகம் இன்ப மயமாகின்றது. வீட்டுலக இன்பத்தை யும் புறக்கணிக்கும் அளவுக்கு அவர்களுடைய கிலே உயர்ந்து விடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/52&oldid=553263" இலிருந்து மீள்விக்கப்பட்டது