பக்கம்:கற்பக மலர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கற்பக மலர்

"கூடும் அன்பினிற் கும்பிட லேயன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினர்' - என்று இறைவன் அடியைச் சார்ந்த திருத்தொண்டர்களின் பெருமையைப் பெரிய புராணம் கூறுகிறது.

இதைவிடப் பின்னும் ஒரு சிறப்பு உண்டு. தேவ லோகம் இன்பத்துக்கே இடமானது; பூவுலகம் இன்பமும் துன்பமும் கலந்த நுகர்ச்சியைத் தருவது; நரகலோகம் துன்பத்துக்கே இடமானது. இவ்வாறு கொள்வது மரபு. இன்பமும் துன்பமும் கலந்த பூவுலக வாழ்க்கை இறைவன் அடிசேர்ந்தார்க்கு இடும்பையற்றதாகும் என்பதை முன்பு பார்த்தோம். நரகலோகங்கட்ட அவர்களுக்குத் துன்பத்தைத் தராதாம். இறைவன் அருளாகிய விளக்கைப் பிடித்த வர்கள் இருள் உள்ள இடத்துக்குப் போனல் அவர்க ளளவில் இருள் தோன்ருது. மழைபெய்துகொண்டிருக்கும் போது குடையைப் பிடித்துக்கொண்டவன் அந்த மழையி னிடையே கின்றும் நனையாமல் இருப்பான். நரகத்தில் இறைவன் அடி சேர்ந்தவன் இருக்க நேர்ந்தாலும் அவன் துன்பத்தை அடைய மாட்டான்.

நரகத்தில் இடர்ப்படோம்' என்று திருநாவுக்கரசர் அருளிய பாட்டில் இந்த அரிய உண்மை புலனுகிறது. நரகம் அடையமாட்டோம் என்று அவர் கூறவில்லை. நரகத்திற்குப் போவதாக இருந்தாலும் அங்கே இடும்பையை அடைய மாட்டோம்’ என்று பொருள் கொள்ளும்படி பாடுகிரு.ர்.

இதனே இன்னும் தெளிவாகச் சொல்கிருர் மணிவாச கப் பெருமான்.

“...கரகம் பெறினும் எள்ளேன் திருவரு ளாலே - இருக்கப் பெறின் இறைவா'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/53&oldid=553264" இலிருந்து மீள்விக்கப்பட்டது