பக்கம்:கற்பக மலர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் சேர் புகழ்

மனிதனுடைய உடம்பிலுள்ள கருவிகள் இரண்டு வகைப்படும். அறிகருவி, செய்கருவி என்பவை அவை; ஞானேந்திரியம், கர்மேந்திரியம் என்று கூறுவர். காக்கு, சுவையுணர் கருவியாக இருக்கும் போது ஞானேந் திரியமாகிறது; பேசும் கருவியாக இருக்கும்போது கர்மேந் திரிய மாகிறது. விலங்கினங்களுக்கு வாய் உண்ணு வதற்கே பெரும்பாலும் பயன்படுகிறது. மனிதனுக்கோ உண்ணும் நேரம் சிறிது; உரையாடும் நேரம் பெரிதாக இருக்கிறது. -

பேசுவதனால் வாய் சிறப்புப் பெறுகிறது; உண்ணு வதனால் அன்று. நம்மைக் காட்டிலும் பெரிய கவளத்தை விழுங்கும் பெரிய வாயையுடைய யானையை அதன் வாயின் பெருமையைக் கொண்டு யாரும் வாயுள்ள பிராணியாகச் சொல்வதில்லை. மனிதன் ஒருவனே வாயுள்ள பிராணி; மற்றவை யாவும் வாய் இல்லாப் பிராணிகளே. விலங்குகளுக்கெல்லாம் வாய் இருந்தாலும் உரைக்கும் வாய் இல்லே. உரைக்கும் வாயே வாய் என்னும் பெருமைக்கு உரியதாதலின் உண்ணும் வாய் பெற்றும் விலங்குகளே வாயில்லாப் பிராணிகள் என்று சொல்கிருேம். மனிதன் பெற்ற பெருவரம் வாயினுற் பேசும் ஆற்றல். அதை அவன் வளர்த்துக் கொண்டு வந்திருக்கிருன். ஒருவன் ஏதேனும் ஒரு கருவியோ, பொருளோ வைத்திருந்தானுளுல் அதைக் கொண்டு மிகச் சிறந்த பயனே அடைவதுதான் அறிவுக்கு அழகு. மனிதன் பெற்ற கருவிகளுக்குள் சிறந்தது வாக்கு என்ருல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/55&oldid=553266" இலிருந்து மீள்விக்கப்பட்டது