பக்கம்:கற்பக மலர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் சேர் புகழ் 4赏

அதனேக் கொண்டு மிகச் சிறந்த பயனைப் பெறவேண்டும்; பயனுள்ள பேச்சைப் பேசவேண்டும்.

வாக்கினல் நிகழும் குற்றங்களே கால் வகையாகப் பிரிப்பார்கள். திருவள்ளுவரும் அந்த நால்வகைக் குற்றங்களையும் அகற்ற வேண்டும் என்று நான்கு அதிகாரங்களில் கூறுகிருர். பொய்கறல், புறங்கறுதல், இன்னத கூறல், பயனில கூறல் என்பவை அந்த நான்கு குற்றங்கள். பயனற்ற சொற்களைக் கூறுபவனே மனிதனென்று சொல்லாதே, மனிதப் பதர் என்று சொல் என்று ஒரு குறளில் கூறுகிருர். பயனில வற்றைப் பேசி ஆற்றலையும் காலத்தையும் வீணக்கக் கூடாது என்பதிலிருந்து, பயனுள்ளவற்றையே கூற வேண்டும் என்ற கருத்தைப் பெறலாம். பயனில சொல்லாமை என்னும் அதிகாரத்தின் இறுதிக் குறளில் இந்த இரண்டு கருத்தையும் ஒருங்கு வைத்துச் சொல்கிரு.ர்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயன்இலாச் சொல். (200)

ஏனேயவர்கள் செய்யும் செயலைக் காட்டிலும் சிறப்பான பயனுடைய செயலேச் செய்வது அறிவுடைய பெரியார் இயல்பு. ஆதலின் மற்றவர்கள் ஒரளவு பயனு டைய சொற்களைச் சொன்னல், அந்தப் பெரியவர்கள் பெரும் பயனே யுடைய சொற்களேயே சொல்வார்கள். பெரும்பயன் இல்லாதவற்றைப் பேச மாட்டார்கள். இதனே யும் வள்ளுவர் கூறுகிருர்:

... - அரும்பயன் ஆயும் அறிவுடையார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல், (199)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/56&oldid=553267" இலிருந்து மீள்விக்கப்பட்டது