பக்கம்:கற்பக மலர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கற்பக மலர்

இதன் உரையில் பரிமேலழகர், அறிதற்கரிய பயன்களாவன வீடு பேறும், மேற்கதிச் செலவும் முத லாயின. பெரும்பயன் இல்லாத எனவே, பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன என்று விளக்கம் தந்தார். -

ஆகவே, அரிய வரமாகிய பேசும் ஆற்றலைப் பெற்ற மனிதன் உயர வேண்டுமானல், பெரும்பயனே யுடையவற்றைப் பேச அந்த ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதன் பெறும் வாழ்க்கைப் பயன்கள் நான்கு, அறம், பொருள், இன்பம், வீடு என்பவை. அவற்றுள் முடிந்த முடிபான பயன் வீடு பேறு. அந்த லட்சியத்தை கினேவில் இருத்தியே காம் வாழ வேண்டுமென்பது இந்த நாட்டினர் கொள்கை. அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் வீடு பெறுவதற்குரிய படிகளாக இருப்பவை. இன்பம் என்பது ஒருவன் ஒருத்தியோடு மனம் ஒன்றி இல்லற வாழ்க்கையில் பிணிப்புண்டு இன்புறுவது. அதையும் வீட்டை அடைய ஒரு வழியாகவே கொள்வர். ஆதலின் மனித வாழ்வில் அவன் செய்யும் செயல்கள் யாவும் அவனுடைய இறுதி லட்சியமாகிய வீடு பேற்றுக்கு மாருக அமையாமல், அதற்குத் துணையாகவே அமைய வேண்டும்.

அப்படியானுல் அவனுடைய பேச்சும் அந்த நெறியில் இருக்க வேண்டும் என்று தனியே எடுத்துச் சொல்ல வேண்டுமா? இறைவன் திருவருளேப் பெற்று வீடுபேறு அடைய வேண்டும்; அந்த அருளைப் பெறும் வகையில் நம் வாக்கு அல்லது பேச்சு இயங்க வேண்டும். இரு வினேயும் நீங்கி மெய்ஞ்ஞானம் பெற்று வீடு பெறும் வகையில் கம் வாக்குப் பயன் பெற வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/57&oldid=553268" இலிருந்து மீள்விக்கப்பட்டது