பக்கம்:கற்பக மலர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கற்பக மலர்

மூலமாய், மறைவில் இருந்து வழங்குபவன் இறைவன். அவன் திருவுள்ளம் இல்லாவிட்டால் நம் கையிலுள்ள பொருளே நமக்குப் பயன்படாது; பிறர் கைப்பொருள் நமக்கு எப்படிக் கிடைக்கும்? .

நாம் ஒரு பொருளேப் பெற்றதற்குரிய நன்றியறிவும் இறைவனேச் சேருவதுதான் முறை. மற்றவை, கருவிகளுக்குக் காட்டுகிற நன்றி. இறைவனகிய மூலப்பொருளைப் புகழ்வதுதான் பொருள் உடையது. நன்ருக எழுதின எழுத்தாளனது பேணுவைப் பார்த்து, 'இது ஆகிவந்த பேணு’ என்று சொல்வது வழக்கக் தான். ஆணுல் அப்படிச் சொல்வது, எழுத்தாள னுக்குரிய புகழைக் குறைப்பதில்லை. உண்மையில் எழுத்தாளன் கைப்பட்டதனுல்தான் அந்தப் பேணு வுக்கே மதிப்பு உண்டாயிற்று. அது வெறும் கருவி தான்.

நமக்கு உபகாரம் செய்யும் யாவரும் இறைவனுடைய அருளாணக்கு ஏற்பவே அது செய்கிருர்கள். ஆதலின் அவர்கள் கருவிகளைப் போன்றவர்கள். கருவியைப் புகழ்ந்து கருத்தாவை மறக்கிறவர்கள் சொல்கிற சொல்லுக் குப் பொருள் உண்டா? அந்தச் சொல் பொருத்தமாக இருக்குமா? -

- ஆகவே, எவன் எல்லா உபகாரங்களுக்கும் மூலமாக கின்று அருளுகிருனே, அவனத்தான் புகழ வேண் டும். அந்தப் புகழே மெய்ப்புகழ், பொருள் சேர் புகழ்.

ஈகை மாத்திரம் அன்று; புகழுக்குரிய எந்தச் செயலே யும் செய்வதற்கான வாய்ப்புகளை அருளுகிறவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/61&oldid=553273" இலிருந்து மீள்விக்கப்பட்டது