பக்கம்:கற்பக மலர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔盔 கற்பக மலர்

'பொன்ளுைய் மணியானப்

போக மானுய் பூமிமேல் புகழ்தக்க

பொருளே நின்னை என்னுணுய் என்னணுய்

என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்து கேனே’’

என்ற திருப்பாட்டில் புலப்படுத்துகிருர்.

இறைவனுடைய புகழைப் பாடுவாருக்கு உண்மை யையே கூறும் தகுதியும், பயனுடையவற்றையே பேசும் நிலையும், இனியவற்றையே உரைக்கும் தன்மையும் அமை கின்றன. அதனால் அவர்கள் இறைவன் திருவருளேப் பெறுகிருர்கள்.

பொய்அஞ்சி வாய்மைகள் பேசிப்

புகழ்புரிந் தார்க்கருள் செய்யும் ஐயஞ்சின் அப்புறத் தானும்

ஆரூர் அமர்ந்த அம் மானே’’ என்பதில் திருநாவுக்கரசர் இக்கருத்தை அருளினர். இறைவன் திருவருளால் இருவினையும் அறும்; வீடு பேற்றை எளிதில் அடையலாம். இவற்றை எண்ணியே திருவள்ளுவர்,

இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

என்ற அருமைத் திருக்குறளேப் பாடினர்.

பழைய நூலாகிய பரிபாடலில் திருமாலப் புகழும் ஒரு பாட்டில், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/63&oldid=553275" இலிருந்து மீள்விக்கப்பட்டது