பக்கம்:கற்பக மலர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

む& கற்பக மலர்

வான். அது என்றும் இருப்பதாக எண்ணிக் கொள்கையை மறந்து ஈடுபட்டுவிட மாட்டான்.

உண்மைப் பொருளே உணர்ந்தவர்களும் உடம்பைப் பேணுவார்கள்; உணராதவர்களும் பேணுவார்கள். ஆலுைம் இருவர் கிலேக்கும் வேறுபாடு உண்டு. இந்த உடம்பு பெறுவதற்கு அரிய கருவியாக நமக்குக் கிடைத் திருக்கிறதென்று உணர்ந்து, உயிருக்கு உறுதி தரும் துறை, களில் கருவி கரணங்களே இயக்கிப் பயன் பெறுவார்கள் பெரியவர்கள்.

'உடம்பினுள் உத்தமன் கோயில்கொண் டானென்

றுடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே'

என்று திருமூலர் கூறுவார்.

உடம்பு நிலையாததென்பதை உணர்ந்து அதை ஒறுத்து அழிப்பது அறிவாகாது. உடம்பு ஐம்பொறிகளே உடையது. ஐம்பொறிகளாலும் நாம் உலகப் பொருள்களே நுகர்கிருேம். அவற்றை மேலும் மேலும் நுகரவேண்டும் என்ற அவா என்றும் அடங்குவதே இல்லை. அதன் பயனுக இந்தப் பிறவி போனுலும் மீட்டும் ஐம்பொறிகளையுடைய உடம்பைப் பெற்று மீட்டும் அந்த நுகர்ச்சியில் ஈடுபடு கிருேம். பிறவி அருமல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

அதற்கு மாருக, உடம்பைக் கொண்டே உடம்பு வாராமல் இருக்கும் நெறியில் நடப்பதே அறி வுடைமை. முள்ளே முள்ளால் எடுப்பதுபோல, இந்த உடம்பைக் கருவியாகக்கொண்டே இறைவனே வணங் கியும் வாழ்த்தியும் தியானித்தும் பாசத்தினின்றும் நீங்கவேண்டும். ஐம்பொறிகளேயும் உலகியற்பொருள் நுகர்ச்சியில் ஈடுபடுத்தாமல் இறை யுணர்ச்சியோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/67&oldid=553279" இலிருந்து மீள்விக்கப்பட்டது