பக்கம்:கற்பக மலர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கற்பக மலர்

யாகப் பற்றியிருக்கும் நாச்சுவையிலும் தெய்வ உணர்வை ஊட்டினர்கள்.

ஆகவே ஐம்பொறி நுகர்ச்சிகளே அடியோடு ஒழிக்க வேண்டுமென்று சங்கடப்படாமல், அவற்றை இறை யுணர்வுக்கு ஏற்ப மாற்றுவதல்ை மனம் இறைவனிடம் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

சிந்தனைகின் றனக்காக்கி நாயி னேன்றன்

கண்ணிணேகின் திருப்பாதப் போதுக் காக்கி

வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குன்

மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர

வந்தனை ஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை

மாலமுதப் பெருங்கடலே மலேயே கின்னே த்

தந்தனேசெங் தாமரைக்கா டனேய மேனித்

தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே’’

என்ற அழகிய பாட்டில் மணிவாசகப் பெருமான் அந்த நெறியைக் கொண்டு ஆண்டவன் தம்ம்ை ஆண்ட வகையைச் சொல்லுகிரு.ர்.

நிலையாத பொருள்களிடையே வாழும் நாம், கிலேயுள்ள பொருளின் கினேவை மறக்கும் வகையில் பொறிநுகர்ச் சியில் ஈடுபட்டால் துன்பமே மிகும்; அதற்கு மாருக மெய்ப்பொருளின் கினேவை ஊட்டும் கருவிகளாகப் பொறிகளையும் புலன்களேயும் மாற்றிக் கொண்டால் அப் போது உட்ம்பே நல்வாழ்வுக்குக் கருவியாகிவிடும். அந்த நிலையில்தான்,

'மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே:

என்று திருநாவுக்கரசர் பாடினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/69&oldid=553281" இலிருந்து மீள்விக்கப்பட்டது