பக்கம்:கற்பக மலர்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

t சென்ற ஆண்டு திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு 'ஒன்றை வெளியிட்டேன். அந்தப் பதிப்புக்காக ஐந்து ஆண்டுகளுக்குமேல் திருக்குறளையும் அதன் உரைகளை யும் ஆழ்ந்து ஆராயும் வாய்ப்புக் கிடைத்தது. திருக் குறளில் உள்ள பல நுட்பங்களையும் கவிச்சுவையையும் உணர்ந்து இன்புற்றேன்.

கடவுளைப் பற்றியும் தேவர்களைப் பற்றியும் சொர்க்கம், நரகம், வீடு என்பனவற்றைப் பற்றியும் திருவள்ளுவர் கூறும் செய்திகளைத் தொகுத்துப் பின்னிச் சில கட்டுரை களை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனுல் இந்தப் பதின்ைகு கட்டுரைகளையும் எழுதிக் கலைமக'ளில் வெளியிட்டேன். -

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடவில்லை என்று யாரோ சிலர் கூறுவதாகக் கேள்வியுற்ற துண்டு. தெய் வத்தைப் பற்றிய கவலை அவருக்கு இல்லை என்பதைக் காட்டவே அந்தக் கருத்தை அவர்கள் சொல்வதாகவும் தெரிந்தது. கடவுள் வாழ்த்தை எடுத்து விட்டாலும் வேறு பல இடங்களில் இறைவனைப் பற்றியும் பற்றற்று வீடுபெறும் நெறியைப் பற்றியும் அவர்கூறும் பாடல்களை என்ன செய்வது? தெய்வத்தைப் பற்றிய செய்திகள் மூன்று பால்களிலும் வருகின்றனவே! கடவுள் வாழ்த் தில் மட்டும் அன்றி வேறு இடங்களிலும் இத்தகைய கருத்துக்கள் வருவதை இந்தச் சிறிய நூலிலுள்ள கட்டு ரைகள் தெளிவாகப் புலப்படுத்தும்.

சொல்லும் கருத்தை யாவரும் எளிதில் உணர வேண்டும் என்பதற்காக அங்கங்கே பல உவமைகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/7&oldid=553217" இலிருந்து மீள்விக்கப்பட்டது