பக்கம்:கற்பக மலர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய் தீர் நெறி 6 &

நெறியை, பொறிவாயில் ஐந்து அவித்தானுடைய நெறி என்று சிறப்பித்தார். அவனுடைய தொடர்பின்றி அந்த ஒழுக்கம் வராது. பொறிவாயில் ஐந்தவித்தானுல் சொல் லப்பட்ட நெறி' என்று பரிமேலழகர் கூறுவர். அவனே லட்சியமாகக் கொண்ட நெறி என்று பொருள் கொள்வது சிறப்பாக இருக்கும். பொறியென்னும் வாயில் வழியே செல்லும் அவாவைப் பெருக்கிப் பிறவிக் கடலில் வீழ்வது பொய்ந் நெறி. அவ்வைந்தையும் மாற்றி மெய்ந்நெறியில் செல்ல, அவற்றேடு தொடர்பு இல்லாதவனுடைய அருள் வேண்டும்; இறைவன் அத்தகையவன் என்பதைக் காட் டவே, பொறிவாயில் ஐந்தவித்தான்' என்று அவனேச் சொன்னர் வள்ளுவர்.

நெறி என்பது வழி. வழிக்குப் புறப்படும் இடம் ஒன்று, செல்லும் நெடிய இடப்பரப்பு ஒன்று, சென்று சேரும் இடம் ஒன்று ஆக மூன்று இருக்கவேண்டும். புறப்படும் இடம் தொடக்கம்; புகும் இடம் லட்சியம்; இடையிலுள்ளதே வழி அல்லது நெறி. இந்தக் குறளில் கூறப்படும் நெறியின் லட்சியம் பொறிவாயில் ஐந்து அவித்தான். அவனே லட்சியமாக உடைய நெறியை அவனது நெறி என்று சொன்னர்; திருச் சிக்குப் போகும் சாலையைத் திருச்சிச் சாலை என்று சொல்வது போன்றது. இது. அந்த லட்சியத்தை அடைய நாம் ஒழுகும் வழியைப் பொய்தீர் ஒழுக்க நெறி என்ருர், நாம் புறப்படும் இடம் பொய்யொழுக்கம். அந்தப் பொய்யை விட்டு மெய்யைச் சேரப் போகிருேம். பொய்தீர் ஒழுக்கம் என்று, புறப்படும் இடத்தை நினேந்து சொன்னர்; லட்சியத்தை எண்ணிச் சொன்னுல், மெய் சேர் ஒழுக்கம் என்று சொல்லலாம். பொய்யை விட்டு மெல்ல மெல்ல அகன்று போகப் போக மெய்யை அனுகலாம். பொய்யைச் சார்ந்திருக்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/72&oldid=553284" இலிருந்து மீள்விக்கப்பட்டது