பக்கம்:கற்பக மலர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை இல்லான்

ஒரு பெரியவர் எல்லாப் பற்றுக்களையும் விட்டுக் காட்டுக்குப் போய்த் தனியாக வாழலாம் என்று எண்ணினர். ஊருக்கு கெடுந்துாரத்தில் இருந்த காட் டுக்குச் சென்று ஒரு குடிசை கட்டிக்கொண்டு, கிடைத்த பழம் கிழங்கு முதலியவற்றை உண்டு வாழலானர். அங்கே போன சில நாட்கள் அவர் அமைதியாக இருந்தார். பின்பு அவரைத் தேடிக்கொண்டு மக்கள் வரத் தலைப்பட்டார்கள். அவர்களுடன் இனிமை யாகப் பேசி வழியனுப்பினர் பெரியவர். தம்மிடம் இருந்த பழங்களைச் சிலருக்குக் கொடுத்தார். வருகிற வர்கள் எல்லோருக்கும் அப்படிக் கொடுக்க முடியுமா?

ஒரு நாள் அவர் யோசனையில் ஆழ்ந்தார். தம்மை நாடி வருகிறவர்களுக்கு ஏதாவது கொடுக்காமல் சும்மர் இருப்பது அவருக்குச் சரியாகப்படவில்லை. எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்ருல் அவரால் முடியாது. இந்தச் சிக்கலைத் தீர்க்க வழி யாதென்று ஆராய்ந்தார். இறுதியில் ஒர் எண்ணம் எழுந்தது. அந்த நாட்டை ஆண்டு வந்த அரசன் நல்லவன்; பெரியவர்களிடம் மதிப்புடையவன். அவனைக் கண்டு தம் நிலையைக் கூறி, வருவோர் போவோருக்கு ஏதேனும் அளித்து உபசரிப்பதற்கு வேண்டிய பொருளேத் தரவேண்டுமென்று கேட்டால், அவன் வழங்குவான் என்று எண்ணினர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/74&oldid=553286" இலிருந்து மீள்விக்கப்பட்டது