பக்கம்:கற்பக மலர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7t) கற்பக மலர்

எனவே, தமக்குக் குறை இருப்பதை எண்ணிக் கவலே அடைபவர்கள், இறைவனே அணுகினல் அந்தக் கவலையை மாற்றிக் கொள்ளலாம். கவலை என்னும் புழு உள்ளத்தை அரித்துக்கொண்டே இருந்தால், ஒருவனுக்கு அமைதியே உண்டாகாது. அவனுடைய கல்வி, ஆற்றல் ஆகியனவெல்லாம் பயனின்றி ஒழியும். அவனிடம் இன்பம் இருக்க நியாயம் இல்லே. கவலை இல்லாதவர்களுக்குத்தான் இன்பம் உண்டாகும்.

"ஒயாதோ என் கவலை, உள்ளேஆ னந்தவெள்ளம்

பாயாதோ, வாய்திறந்து பகராய் பராபரமே”

என்று தாயுமானவர் பாடுகிருர். உள்ளே ஆனந்த வெள்ளம் பாய்ந்து நிரம்ப வேண்டுமானுல் கவலை ஒயவேண்டும். குறையுடைய வரைக்கும் கவலை ஒயப் போவதில்லை. குறை தீர்ப்பாரைக் கண்டால் கவலே தீர வழி பிறக்கும். -

இறைவன் ஒருவனே கவலையைத் தீர்ப்பவன் என்ற உண்மையை அறிந்து அவனே நாடவேண்டும். மனத்திலே தோன்றிய கவலையை மாற்ற அந்த மனத்துக்கே மருந்து ஊட்ட வேண்டும்; இறைவனேத் தியானம் செய்ய வேண்டும்.

குறை தீர்க்க வேறு யாரேனும் உள்ளாரோ என்று ஆராய்ந்தால் யாரும் இல்லே என்ற முடிவுக்குத்தான் வர முடியும். இறைவனேப்போல வேறு யாரேனும் இருந்தால் அவரைச் சார்ந்து குறையைப் போக்கிக் கொள்ளலாம். அப்படி யாரும் இல்லை. இறைவன், ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். ஆதலின் அவனே யன்றி வேறு புகல் இல்லை. அவன் தாளேத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/79&oldid=553292" இலிருந்து மீள்விக்கப்பட்டது