பக்கம்:கற்பக மலர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

கூறியிருக்கிறேன். பரிமேலழகர் உரையிலும் பிறர் உரைகளிலும் காணும் பகுதிகளைச் சில இடங்களில் எடுத் துக் காட்டியிருக்கிறேன். தொல்காப்பியம் முதலிய பழந் தமிழ் நூல்களிலுள்ள மரபை எடுத்துக் காட்டியதோடு, தேவாரம் முதலிய அருளாளர் திருவாக்குகளில் திருக் குறளின் சொல்லும் பொருளும் புகுந்து விளங்குவதையும் சொல்லியிருக்கிறேன்.

திருக்குறளை வெவ்வேறு வகையில் ஆராய்ந்து எழுதலாம். வாழ்க்கையின் வகைகளைத் திருவள்ளுவர் எப்படி நுட்பமாகத் தெரிந்து உணர்த்தியிருக்கிருர் என் பதையும், மனிதப் பண்பையும் மனிதனை உயர்த்துவதற் குறிய நெறியையும் இடமும் காலமும் கடந்து எல்லாச் சமுதாயத்துக்கும் பயன்படும் வண்ணம் அவர் எவ்வாறு காட்டியிருக்கிருர் என்பதையும், இவை போன்ற பலபல பகுதிகளையும் ஆராய இடம் இருக்கிறது. திருக்குறளை ஆழ்ந்து பயிலும் அறிஞர்கள் அவ்வாறு எழுதப் புகுவார் களானுல் எத்தனையோ நல்ல புத்தகங்களை நாம் பெறலாம்.

-န္ဟစ္ခ်ိဳ႕ႏိုင္ဆိုႏိုင္ငံ ... கி. 6aᎫᏰᎢ , ஜகந்நாதன்

சென்னை-28 ),

2–10–1964

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/8&oldid=553218" இலிருந்து மீள்விக்கப்பட்டது