பக்கம்:கற்பக மலர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை இல்லான் ንî

தியானித்து மன அமைதி பெறவேண்டும். இவற்றை யெல்லாம் கினேக்கும்படி அமைந்திருக்கிறது பின்வரும் குறள்:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

(தனக்கு ஒப்பாக வேறு யாரும் இல்லாத இறைவனுடைய . திருவடியைத் தியானிப்பவர்களுக்கு அல்லாமல் மனக்கவலேயை நீக்குதல் இயலாது.)

அரிது என்பது இயலாது என்ற பொருளில் வந்தது. :ாண்டு அருமை இன்மைமேல் கின்றது என்பர் பரிமேலழகர். .

இறைவன் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லா தவன் என்பதைப் பெரியார்கள் பலரும் சொல்லிப் போந்தனர்.

'நின்னெடு, புரையுநர் இல்லாப் புலமையோய்”

என்பது திருமுருகாற்றுப்படை.

"ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா' என்பது திருவாய்மொழி.

'தனே ஒப்பாரை இல்லாத் தனியை” "ஒப்புனக் கில்லா ஒருவனே’’

என்பவை திருவாசகப் பகுதிகள்.

'தன்னேர் பிறர் இல்லானே'

என்று சம்பந்தரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/80&oldid=553293" இலிருந்து மீள்விக்கப்பட்டது