பக்கம்:கற்பக மலர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கற்பக மலர்

என்ற நடுநிலையுணர்வு பிறக்கும். யாவும் இறைவன் அருளால் விளைவன என்ற எண்ணம் முறுக முறுக அவன் அருள்வது இன்பமே என்ற அநுபவமும் உண்டாகும். ஆகவே அவர்கள் குறைவிலா கிறை வாழ்வைப் பெறுவார்கள். -

"நாமார்க்கும் குடியல்லோம்; நமனே அஞ்சோம்;

நரகத்தில் இடர்ப்படோம்; கடலை இல்லோம்;

ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோ மல்லோம்;

இன்பமே எங்காளும் துன்பம் இல்லை.

தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான

சங்கரனற் சங்கவெண் குழைஒர் காதிற்

கோமாற்கே யாமென்றும் மீளா ஆளாக்

கொய்மலர்ச்சே வடியிணையே குறுகி னுேமே!’’

என்பது அப்பரின் அநுபவ வாக்கு. இறைவனுடைய கொய்மலர்ச் சேவடியிணேயைக் குறுகியதல்ை அவருக்கு இன்பமே எந்நாளும் உண்டாயிற்று; துன்பமே இல்லாத நிறை வாழ்வு அமைந்தது. இறைவனே யாருக்கும் குடியல்லாத தனிநாயகன்; தனக்கு உவமை யில்லாதவன்; அவனுக்கு மிக்க தலைவனும் இல்லை; அவனே தனித் தலைவன்.

மனிதன் குறையுடையவன். அந்தக் குறையை உலகியற் பொருளேத் தேடியும், அவற்றைத் தருவாரை நாடியும் நிரப்பிக் கொள்ள முடியாது. காலதேச எல்லைக்குள் அடங்கிய ஆற்றல், செல்வம், அறிவு முதலிய வற்றை உடைய மனிதன் தன்னைப்போலவே எல்லேக்குள் , அகப்பட்டவனல் கிறைவு பெற முடியாது. ஆதலின் எல்லேயிறந்த ஒருவனே அடைந்தால் நிறைவு உண்டாகும். அப்படி இருப்பவன் ஒருவன்தான், அவனே இறைவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/83&oldid=553296" இலிருந்து மீள்விக்கப்பட்டது