பக்கம்:கற்பக மலர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவாழி அந்தணன்

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் உறுதிப் பொருளென்று சொல்வது மரபு; வட மொழியில் புருஷார்த்தம் என்று கூறுவர். மனிதனுடைய வாழ்வில் நிகழும் செயல்கள் யாவும் இந்த நான்கையும் சார்ந்தே இருக்க வேண்டுமென்பது இந்நாட்டவர் கருத்து.

இந்த நான்கிலும் வீடு என்பது இன்ப துன்பங் களுக்கு அப்பாற்பட்டுப் பிறப்பு இறப்பு என்னும் துன்பங்கள் இல்லாததாய் நிலவுவது. அதுவே முடிந்த முடிவான லட்சியம். இவ்வுலகில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் கிரப்பி, இப்பிறவியின் இறுதியில் வீடு பெறவேண்டும். இவ்வுலகில் இருக்கும் போது துறவு பூண்டு விரதம் காப்பதும், இறைவன்பால் அன்புகொண்டு வழிபட்டு வாழ்வதும் வீடு பெறுவதற்குரிய வழிகள். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுமே வீட்டு நெறிக்கு உதவியாக இருக்க வேண்டியவை.

வாழ்க்கையின் லட்சியம் நான்காவது உறுதிப் பொருளாகிய வீடானல், வாழ்க்கையில் எப்போதும் பிரிவின்றி கிற்பது அறம். எச்செயலைச் செய்தாலும் அது அறத்தோடு சார்ந்ததாய் வீட்டு நெறியில் விடுவதாக அமைய வேண்டும்.

முடிவு (End) என்றும் நெறி (Means) என்றும் சொல்லும் இரண்டினுள் முடிவு வீடு; நெறி அறம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/85&oldid=553298" இலிருந்து மீள்விக்கப்பட்டது