பக்கம்:கற்பக மலர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற வாழி அந்தணன் 79

அருளே அறத்துக்கு மூலமாவது என்பதைச் சைவ நூல்களில் காணும் ஒரு கருத்தினுலும் தெளிவு பெறலாம். இறைவனுடைய பேரருளே சக்தி என்பது சைவநூல் துணிபு. அந்தச் சக்தியே அறப்பெருஞ் செல்வியாக நிலவுகிருள். -

இறைவன் அந்தணனாக நின்று அறம் வகுத்தான்; அறமே வடிவாக, அறக்கூறுபாடுகள் யாவும் தாகை, அறக்கடலாக விளங்குகிருன். அருளும் அறமும் இணைந்த இந்த கிலேயைத் திருநூற்றந்தாதி ஆசிரியர், 'அருளோ டெழும் அறவாழி அப்பா’ என்று கூறுவர். "அறவனே ஆழிப்படை அந்தணனை' என்பது திருவாய்மொழி. -

அறக்கடலாகிய இறைவன் திருவடியைச் சார்ந்த வர்கள் இவ்வுலகில் அறநெறியில் நின்று பொருளும் இன்ப மும் துய்த்துப் பின்பு வீட்டை அடைவர். அறம் பொருள் இன்பம் என்னும் இம்மூன்றும் இந்த உலக வாழ்விலே பெறுவதற்குரியவை. இம்மூன்றும் விட்டுப் பெறுவது வீடு. - -

'இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு” என்பது ஒளவையார் வாக்கு. -

அறக் கடலாக உள்ள இறைவன் திருவருளால் பொருள், இன்பம் என்னும் இரண்டையும் பெற்று அவற்றைக் கடந்து அப்பால் வீடு பெறவேண்டும். பொருளும், இன்பமும் ஒருவனுக்கு நிறைவைத் தருவது இல்லை. பொருளிட்டினருக்கு மேலும் மேலும் பொருளே ஈட்ட வேண்டு மென்னும் கிரீனவு எழுந்து கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/88&oldid=553301" இலிருந்து மீள்விக்கப்பட்டது