பக்கம்:கற்பக மலர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 0 கற்பக மலர்

இருக்கும். பொருளைக் குவிக்க வேண்டுமென்னும் எண்ணமுள்ளவர்களிடம் இந்த நினைவு இருப்பது வியப்பன்று. ஆனல் பொருளே ஈட்டி அறச் செயலும் இன்பச் செயலும் புரிபவர்களும் மேலும் மேலும் அவற்றை விரிவாகச் செய்யவேண்டும் என்று அவாவி, அதற்குக் கருவியாக உள்ள பொருளேப் பின்னும் ஈட்டும் முயற்சியில் தலைப்படுவார்கள். நூறு ஏழைகளுக்கு உணவளித்து இன்புற்றவர்கள் ஆயிரம் பேருக்கு உண வளிக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பே. ஆதலின் பொருளே நற்செயலின் பொருட்டு ஈட்டு பவர்கள் அவ்வாறு ஈட்டுவதற்கு ஒர் எல்லேயே இல்லாமல் முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். ஆதலின் பொருளும் எல்லே காண இயலாத கடலேப் போன்றது.

இன்பமும் அத்தகையதுதான். க்ற்புடை மனேவியோடு முறை பிறழாது இன்பம் நுகர்பவர்களும் அவ்வின்பத்தை நெடுங்காலம் நுகர விரும்புகிருர்கள். வீட்டின்கண் வேட்கை உண்டானுலன்றிப் பொருளிலும் இன்பத் திலும் போதும் என்ற நினைவு உண்டாவதில்லை. ஆதலின் அவ்விரண்டையும் கடலென்று சொல்வது பொருந்தும். வள்ளுவர் அவ்விரண்டையும் ஆழி என்றே சொல்கிருர்,

பொருட்கடலையும் இன்பக்கடலையும் கடந்து செல்ல இறைவன் திருவருள் வேண்டும். அறக்கடலாகிய அவனுடைய திருவடியைச் சேர்ந்தவர்கள்-தொழுது வழுத்தித் தியானித்தவர்கள்-அவ்விரண்டையும் கடப்பார் கள். இதையே திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் எட்டா வது திருக்குறளில் சொல்கிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/89&oldid=553302" இலிருந்து மீள்விக்கப்பட்டது