பக்கம்:கற்பக மலர்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sé கற்பக மலர்

யைக் குறித்து கிற்றல் காண்க. ஆதலின் எழுமை என்ப தும் அச்சொற்களைப் போலவே ஏழு பிறப்புக்கள் என்ற பொருளே உடையதாயிற்று. பலவற்றைக் குறிக்கும்போது ஏழு என்று சொல்வது ஒரு வழக்கு. ஆகவே திருக்குற ளில் எழுமை என்று ஏழு பிறப்பைக் குறித்தாலும் தொடர்ந்து வரும் பல பிறப்பையே அது குறிக்கிறது என்று கொள்ளவேண்டும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து - (126) ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு ".. எழுமையும் ஏமாப் புடைத்து (398) புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையும் இல் (538) ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. (836)

என்று வரும் குறள்களில் ஒரு பிறப்பில் செய்த செயலின் விளைவு தொடர்ந்து ஏழு பிறப்புக்களில் வந்து கூடும் என்ற பொதுவான கருத்து இருக்கிறது. பிறவிகளும் அவற்றிற் செய்த வினைப்பயன்களும் தொடர்ந்து வரும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டவை இந்தக் குறள்கள். -

இவ்வாறு வரும் பிறவியில் இன்பமும் துன்பமும் கலந்தே வருகின்றன. புண்ணியத்தின் பயனகிய இன்பத்தையே அநுபவிக்கும் பிறவி தேவர்களின் பிறவி என்றும், பாவத்தின் பயனகிய துன்பத்தையே நுகரும் பிறவி விலங்குப் பிறப்பு என்றும், புண்ணிய பாவங்களாகிய கலப்பு வினைகளின் பயனுகிய இன்ப துன்பக் கலப்பை நுகர்வது மனிதப் பிறவி என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/95&oldid=553309" இலிருந்து மீள்விக்கப்பட்டது