பக்கம்:கற்பக மலர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவிப் பெருங்கடல் ჯუ^

கூறுவர். நமக்கு மனிதப் பிறவியைப்பற்றி நன்ருகத் தெரியும். தொடர்ந்து துன்பத்தையே அடைவோரும், தொடர்ச்சியாக இன்பத்தையே அடைவோரும் யாரும் இல்லை. அந்த இரண்டும் கலந்தே வாழ்க்கையில் வருகின்றன.

இத்தகைய பிறவி வேண்டுமா, வேண்டாமா? நாம் வேண்டுவதல்ை வருவது அன்று பிறப்பு என்று சொல்லலாம். ஆயினும் பிறப்புக்கு மூலமாகிய வினைகள் ஒழிந்தால் பிறப்பும் அறும் என்ற கியதி ஒன்று இருக்கிறது.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் (349)

என்பது வள்ளுவர் வாக்கு. ஆகவே பிறப்பு வராமல் இருக்கும் வழி உண்டு என்பது தெளிவாகிறது. பிறப்புப் பல பெற்று உலகில் வந்து வாழ்வது உயிருக்கு நன்ரு, அல்லது பிறப்பின்றி வாழ்தல் நன்ரு? இக் கேள்விக்கு ஒரு விடைதான் உண்டு. அந்த விடையில் இந்த நாட்டுச் சமயங்களுக்குள் வேறுபாடு இல்லை. பிறப்பினின்றும் விடுபடும்போதுதான் உயிர் உண்மையான இன்பத்தை அடைகிறது. அந்த இன்பமே விடு. அந்த இன்பம் எத்தகையது, அதில் உயிரின் கிலே என்ன, உயிருக்கும் இறைவனுக்கும் எத்தகைய தொடர்பு அப்போது இருக்கும் என்பவற்றில் அவ்வச் சமயத்துக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆயினும் பிறப்பை அறுக்க வேண்டும் என்பது யாவருக்கும் உடம்பாடு; அது சமயம் பலவற்றிற்கும் பொதுவான கொள்கை. -

இந்தக் கொள்கையைப் பொதுநூல் செய்த வள்ளுவர் பல்வேறு வகையில் சொல்லியிருக்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/96&oldid=553310" இலிருந்து மீள்விக்கப்பட்டது