பக்கம்:கற்பக மலர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. கற்பக மலர்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது வேண்டாமை வேண்ட வரும் (362).

என்பதில் இதைச் சொல்கிருர். பிறப்புத் துன்பமாதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமை வேண்டும்; அப் பிறவாமைதான் ஒரு பொருளேயும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம் என்று இதற்குப் பரிமேலழகர் உரை எழுதுகிருர். பிறவாமையே நமக்கு லட்சியம்; அதை அடைய அவர் அறுத்தலே வழி.

ஒர்த்துள்ளம் உள்ள துனரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (357)

என்னும் குறளும், மெய்ப்பொருளே ஒருமைப்பாட்டுடன் தியானம் செய்தால் மீட்டும் பிறப்பு வரும் என்ற கினவே வேண்டாம் என்ற கருத்தைச் சொல்கிறது.

மறுபடியும் வந்து பிறவாத நெறியை, மற்றீண்டு வாரா நெறி' என்று கூறுவர் திருவள்ளுவர். இங்கு வந்து பிறவாமையாகிய லட்சியத்தைப் பெற்ற வழியை, தக்கவாறு கல்வி கற்று மெய்ப்பொருளேக் கண்டவர்கள் மேற்கொள்வாராம்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர். மற்றீண்டு வாரா நெறி. (366)

அறத்தின் பெருமையைக் கூற வந்தவர் அது வீடுபேற்றையும் தரும் என்கிருர். வீடு என்று சொல்லாமல் வாழ்நாள் வழியை அடைத்தல் என்று கூறுகிருர். அதனே அடைக்கும் கல்லாக அறம் பயன் படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/97&oldid=553311" இலிருந்து மீள்விக்கப்பட்டது