பக்கம்:கற்பக மலர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கற்பக மலர்

இரண்டு காலும் புதையுமே அன்றி மேலெழ இயலாது. கையை ஊன்றிக் காலே எடுக்கலாம் எனிலோ கையும் புதையுமேயன்றி வேறு இல்லை. அருகில் சேற்றில் புதைந்து நிற்பவனைப் பற்றிக் கொண்டு கரையேறலாம் என்பதும் நடக்கிற காரியம் அன்று. ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு பின்னும் ஆழவேண்டியதுதான். கரையில் இருக்கிறவன் ஒருவனுடைய பிடிப்பைக் கொண்டு சேற்றில் ஆழாமல் தப்பலாம். இதுதான் தக்க வழி.

பற்று என்னும் சேற்றில் ஆழ்ந்த ஒருவன் அதனி னின்றும் விடுபடவேண்டுமாயின் பற்றே இல்லாத ஒரு வனப் பற்றிக்கொள்ள வேண்டும். கரையில் இருப்பவனைப் பற்றிக் கொள்ளும் அளவுக்கு நமக்குக் கை நீளவேண்டும்; அல்லது நம்மைப் பற்றிக்கொள்ளும் வகையில் கரையில் இருப்பவனுக்கு நெடுங்கையாக இருக்க வேண்டும். கரையில் கின்று தன் நெடுங்கையை நீட்டுபவன்தான் இறைவன். அவனேப் பற்றிக்கொண்டால் நாம் பற்றி னின்றும் விடுபடலாம். இதை ஒரு குறளில் திருவள்ளுவர் சொல்கிருர்.

பற்றுக பற்றற்ருன் பற்றினே; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (350)

பற்றெல்லாம் ஒழிந்த பிறகே இறைவன் திருவடி சேரவேண்டும் என்கிருர்களே! பற்று உள்ளபொழுதே அவனைப் பற்றுவது எப்படி? என்று எழும் ஐயத்துக்கு விடையாக, நீ பற்றினின்றும் விடுபடுவதற்காகவே அவன் பற்றைப் பற்றவேண்டும் என்று சொல்கிருர், சேற்றில் இருந்தபடியே கரையில் இருப்பவன் கையைப் பற்றினல் தான் கரைசேர முடியும். பற்றில் அழுந்திய நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/99&oldid=553313" இலிருந்து மீள்விக்கப்பட்டது