பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூபதியின் ஒருநாள் அலுவல் 11 மென்று. படாடோபத்தோடு சரி. படிப்பு கிடையாது. மிரட்டத் தெரியும், ஒரு வேலையும் தெரியாது. எப்படிப் பிழைப்பான், என்ன வேளைக்கு இலாயக்கு. கூலி வேலை கூடச்செய்ய முடியாதே, உடவிலே அதற்கு வலிவு ஏது. ஒன்றுக்கும் பயனற்றவன். ஏதோ அங்கே பிறந்ததால், ஆடுகிறான் ஆட்டம். இதிலே பெருமையில்லை. இதற்காக இவனை நான் மதிக்கத் தயாராக இல்லை! என்னைக் கேட் டால், அவன் கையாலாகாதவன். பிழைக்கத் தெரியாத வன், அப்பா சேர்த்து வைத்திருப்பதைச் செலவிட்டுக் கொண்டு திரியும் ஒரு வீன் ஜம்பக்காரன் என்றுதான் சொல்லுவேன்.' என்று வெறுப்பு, அலட்சியம் இரண் டையும் ஏராளமாகக் கலந்து பேசினான். பேசிவிட்டு 'அக்பர்ஷா' சிகரட்டைப் பற்றவைத்தான், ஆனந்தமாக. "குட்மார்னிங் மிஸ்டர் உட்காருங்கள் உங்களைப் போன்ற உயர்ந்த அந்தஸ்த்துக்காரர்கள் தான் ஊருக்கே மதிப்புத்தரவேண்டியவர்கள். உங்களுடைய உதவியும் திறமையும் தானே ஊருக்கே பொதுச்சொத்து. நீங்க ளெல்லாம், நினைத்தால் எந்தக் காரியமும் சாத்தியமாகும். நீங்கள்தான் ஊர் ஜனங்களைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லவேண்டும். ஜனங்கள் நல்வழிப்பட, நாகரிகம்பெற, அறிவு பெற, நீங்கள்தான் வேலை செய்யவேண்டும். டிப்டி கலெக்டர், J ஈஸ், பங்களா எதிரே வந்துநின்றது, மிட்டாதாரர் பூபதியின் மோட்டார் என்பதை டபேதார் சொன்னதும், புதிய நாற்காலியைப் போடச் சொன்னார். பூபதி கொஞ்சம் வெட்கத்துடன் உள்ளே வரக்கண்டு,புன் சிரிப்புடன் வரவேற்றார்; கைகுலுக்கினார், கொஞ்சநேரம் 'லோக' விஷயம் பேசினார், பிறகு, பூபதியுத்தநிதி சம்பந் தமாக மேலும் கொஞ்சம் மும்முரமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக, அவனைத் தூண்ட ஆரம்பித்தார். பூ திக்குக் கொஞ்சம் 'ஸ்துதி' செய்தால் போதும், சொல் கிறபடி ஆடுவான் என்று J. ஈஸ், நினைத்தார். ஆகவே