பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கற்பனைச்சித்திரம் மதிப்புத்தர வேண்டுமென்ற அவசியம் கிடையாது. சட்டம், உம்மையும் 'சாதாரண மனிதனையும் சமமாகத் தான் நடத்தும், உளறாமல், கேட்ட கேள் விகளுக்கு, ஒழுங் காக, உண்மையை ஒளிக்காமல் பதில் சொல்லவேண்டும். குடித்துவிட்டு, நிலைதவறி, மோட்டார் ஒட்டிக்கொண்டு போனது, முதல்குற்றம்; மோட்டார் ஒட்ட nை சென்சு வாங்கவில்லை; அது இரண்டாவது குற்றம்; நாலு காலன் பெட்ரோல் டின் உமது மோட்டாரில் இருந்தது. அதற்கு உமக்கு "கோட்டா" இல்லை, பிளாக் மார்க்கட் பெட்ரோல் அது; மூன்றாவது குற்றம்; ஏன் உன்னை நான் சார்ஜு செய்யக்கூடாது? அன்று மாலைதான், சார்ஜு எடுத்துக் கொண்டார், சப்- இன்ஸ்பெக்டர் சாப்ஜான்; அவருக்கு. கனம் ஆகாகான் தூரபாத்யம்; ஆகவே, அவர் சாதாரண மாக எந்தச் சீமானாக இருந்தாலும், நமக்கென்ன என்று கூறுபவர்; பூபதியின் பூர்வோத்திரம் தெரியாது. தெரிந் தாலும் அதற்காகச் சப் இன்ஸ்பெக்டர் தன் டீக்கைக் குறைத்துக்கொள்ளுகிறவரல்ல. டிப்டி கலெக்டரிடம் கை குலுக்கிய ஜோரில், மோட்டாரைக் கொஞ்சம் வேகமாக ஓட்டினார் பூபதி. ஒரு சிறுவன், சிக்கிக்கொள்ள இருந்தான்; திடீரென்று, 'பிரேக்' போட்டார். ஜனங்கள் கூவினார்கள். இவ்வளவும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வெகு சமீபத்திலே நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர் சேதி என்ன என்று பார்க் கச்சொன்னார். ஜவானை. அவன், மோட்டரை நிறுத்தச் சொல்லிவிட்டு, ஐயா கூப்பிடுகிறார்! என்று சொன்னான் பூபதியிடம். பூபதிக்குப் பழைய சப்- இன்ஸ்பெக்டரே அங்கு இருப்பதாக எண்ணம், ஆகவே, நாளைக்கு வீட் டண்டை வரச்சொல் என்று கூறினார். சப்-இன்ஸ்பெக்டர் சாப்ஜான், இதை ஜவான், சொன்னதும் ஒரு முறைப் பிலே, ஜவானின் குலையை நடுங்கவைத்தார். வெளியே போனார், தங்கப் பிறம்பை ஆட்டிக் கூப்பிட்டார் பூபதியை. புதிய ஆசாமியாக இருக்கவே, பூபதி ஸ்டேஷனை நோக்கி வரவேண்டி இருந்தது." உள்ளே போய் இரும்" என்று. கூறிவிட்டு, கும்பலை விரட்டும்படி ஐவான்களை அனுப்பி விட்டு நேரே, மோட்டார் இருக்குமிடம் சென்று சோதனை