பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூபதியின் ஒருநாள் அலுவல் 17 பாடுபடுபவர்களே! மேனி கருத்தவர்களே!" என்று வார்த்தைகள் கணீர் கணீரெனக் கிளம்பிற்று. பூபதியீன் முகத்திலே வெறுப்புக்குறி தோன்றிற்று. தொழிலாளிகள் கூட்டம் போலிருக்கு என்று மெள்ளக் கூறிக்கொண்டே மோட்டாரைச் சற்று வேகமாக ஓட்டலானான். ஆனால் பிரசங்கியின் குரல் வேகமாக, அழுத்தமாக, ஆவேசத் துடன், மோட்டாரைத் துரத்திக்கொண்டு வருவதுபோல் இருந்தது.கூட்டத்திலே ஒலிபெருக்கி இருக்கவே பூபதியின் செவியிலே, ஓட்டி உடல் உலர்ந்து ஏன் நாம்ப இருக்கி றோம், பாடுபடாமலா இருக்கிறோம். ஏன் பசியாரச் சாப் பிடக்கூட முடியலேன்னு கேள்வி கேட்கறயேப்பா, அதோ பார், போறான், உழைப்புறுஞ்சி! அதுபோன்ற ஜென்மங் களைக் கொழுக்கவைக்கத்தான் நாம்ப பரம்பரையாப் பாடு பட்டுப் பாடுபட்டு, இந்தக் கதியானோம். தெரியுதா? நாம் இப்படி இருக்கக் காரணம், அவனுங்க அப்படி இருக்கிறதாலேதான்" என்று அந்தப் பிரசங்கி பேசியது தெளிவாகக் கேட்டது. கோபம் அதிகரித்து பூபதிக்கு, மோட்டாரின் வேகமும் அதிகரித்தது. வேகம் பங்களா வாயற்படிக் கத்வைத் தாக்கிற்று, கோபம், தோட்டக் காரன் முதுகிலே சுரீல் எனப் பாய்ந்தது. ஆனால் அன்று இரவு, பூபதியின் தலையணை நனைந்து விட்டது வெட்கம், கோபம், துக்கம், யாவும் ஒரே சமயத்திலே தாக்கியதால் மனம் கண்வழியாக நீரைச் சொரிந்தது! தூங்க முயற்சித் தான் முடியவில்லை, உழைப்பை உறுஞ்சுபவன்! போகிறான் பாரி! அந்த ஜென்மங்களை நாம் கொழுக்க வைக்கிறோம்." என்ற சத்தம், அவன் செவியைத் துளைத்துக்கொண்டே இருந்தது.சோடர் குறைவாகக் கலந்து, விஸ்கியைச் சாப் பிட்ட பிறகும் அந்தச் சத்தம் கேட்டபடி இருக்கவே, பூபதி ரேடியோவைத் திருப்பினான். பஞ்சம் பரவி, பட்டினி அதிகரிக்கனே, பாடடக் கூட்டம் படைபோலத் திரண்டு, மாளிகைகளில் நுழைந்து, கொள்ளை அடிக்கவும், தடுத்தவர்களைத் தாக்கவும், ஷகது