பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கற்பனைச்சித்திரம் தவள். தேவா, கலியாணப் பேச்சைக்கேட்டு கோபித்தால், மாரி, அடங்கிவிடுவாளா என்ன! ஜூலியா எவ்வளவு ரோஷக்காரியோ அவ்வளவு ரோஷக் காரிதானேம்மா நீயும்!" என்று மாரி மேலும், கேலி செய்து கொண்டிருந்தாள். ஜூலியாவைச் சாந்தப் படுத்த முடியாமல், சோகமடைந்த ஜிம்மியின் பரிதாபப் பார்வையைக் கண்டு, தேவா, ஓடிச்சென்று, பிஸ்கட் துண்டுகளைக்கொண்டு வந்து போட்டாள் ஜிம்மிக்கு ஜூலி யாவிடம் சரசமாடுவதிலே இருக்கிற சுவை, பிஸ்கட் தின் பதிலே ஏற்படுமா? தின்னவில்லை! ஜூலியாவும் ஓருமுறை ஜிம்மியின் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு மறுபடியும் அலட்சியமாக வேறு பக்கம் திரும்பிக்கொண்டது.

அப்பா! அந்தக் குச்சு நாய்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன பார்த்தாயா? நேற்று, நான் ஜுலியாவைத் தொட்டுத்தடவிக் கொடுத்தேன், பட்டு மெத்தை மேலே கை வைப்பது போல இருந்ததப்பா !' அழகான நாய்கள் தான்! ஜூலியா, ஜிம்மி, இரண் டையும், பெங்களூரில் வாங்கினாராம். விலை என்ன தெரி மா? போன மாதம், நமது கம்பங்கொல்லையை விற் றோமே, என்ன விலைக்கு?" 250-க்கு?” ஜுலியா. ஜீம்.மியின் விலையும் 250-தான்" சுகானந்த முதலியாரும் அவர் மகன் சிங்காரமும், மார்வாடியிடம் அடமானத்திலிருந்த தங்கள் ஓட்டு வீட்டிலே உட்கார்ந்து கொண்டு, தனபாலச் செட்டியாரு டைய பங்களாவிலே. !' தர்பார்' நடத்தி கொண்டு வந்த ஜூலியா ஜிம்மி எனும் குச்சு நாய்களைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள் இதுபோல: வீடு, ஈடுகாட்டப்பட்டது1