பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு பரம்பரைகள் 23 அதே கதையாத்தான் இருக்கு. ஏது, பெரிய அமுல் நடக்குதே இங்கே, இப்போ என்னமோ அதிர்ஷ்டம் அடிச் சுது, பணம் சேர்ந்தது, இதற்காகப் பழைய மரியாதை பாசம், நேசம் எல்லாம் போயிடணுமா? நான் என்னமோ, மற்றவங்களைப் போலே தலை துள்ளிப் போலாமே, நீ மட்டு மரியாதையோடே இருந்து வருவேன்னுதான் நினைச்சேன். பணம் சேர்ந்ததும்,நீயும்,அதுக' போலத்தான் நடக் கறே. இது சரியல்ல! செல்வமிருக்கே, அது சாஸ்வத மல்ல! என்ன பணம் இருந்தாலும் பிரயோஜனமில்லை, குணம் இருக்கணும். அப்போதுதான், லட்சுமி தங்குவா!” என்று மள மள வென்று, தன் மனதிலுள்ளதைப் பூராவும் கொட்டிவிட வேண்டுமென்று கோபத்தோடுதான் மடமட வென்று, வேலைக்காரன் பின்னோடு, சென்றார் சுகானந்தம். அவ்வளவு கோபமும் பறந்து போகும்படி செய்துவிட்டார் தனபாலச் செட்டியார், சுகானந்தத்திடம் பேசி அல்ல வேலைக்காரனை ஏசி! "ஏண்டா, தடியா ! இவரையா, யாரோ வந்திருக் காங்க என்று சொன்னே.முட்டானே! இவர் யாரு?நம்ம சினேகிதரடா! இந்த உலகத்திலேயே, என் குடும்ப விஷயமா அக்கரை கொண்டவர் யாராவது இருக்கிறாங் களான்னா, அது இவர் தாண்டா1 மடப்பயலே ! இனி, எப்போதானாலும் சரி இவர் வந்தா, நீ நிறுத்தக்கூடாது. கேள்வி கேட்கக்கூடாது இவர்தான் நான், நான்தான். இவர்1 போ!. மனுஷர்ளுடைய தராதரம் தெரியலை" என்று தனபாலச் செட்டியார் வேலையாளைக் கண்டித்தார். உச்சி குளிர்ந்தது சுகானந்தத்துக்கு. மெய்மறந்தார். தனபாலுக்குக் கோடி கோடியாகச் சேர்ந்தாலும் தகும் என்று எண்ணிக்கொண்டார். பழைய சினேகிதத்தை எவ்வளவு மதிக்கிறான் தனபாலு ! எவ்வளவு அருமையான குணம்1 குணம் அப்ப இருப்பதால்தான். பணம் சேர்ந்தது1 என்று எண்ணிக்கொண்டான். தன்னைப் பெருமைப்படுத்திய நண்பனைப் பற்றி அன்று முதல், சுகானந்தமும் தானாகவே மரியாதையோடு பேசிப் نا