பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு பரம்பரைகள் குட்டியை ஏற்றுக்கொள்ள. எனவே, "பழைய சிநேகிதம் மறக்கலாமா" "கவர்னரே கேட்டால்கூடத் தரமாட்டேன் உனக்குத் தருவதாகக் கூறிவிட்ட பிறகு," “பேச்சு என்றால் பேச்சுத்தானே." என்ற மொழிகளைச் சேர்த்து, தனபாலர் நாய்க்குட்டியைத் தந்தார். சுகானந்தத்திடம், சிங்காரம், அன்னத்துக்குத் தர எண்ணியிருந்த முத்தங்களிலே அரைப்பாகத்துக்கு மேலாகவே, தந்துவிட்டான், ஜார் ஜூக்கு - அதாவது நாய்க்குட்டிக்கு! நாய்க்குட்டியைப் பராமரிக்க வேண்டிய முறைகளை விளக்கமாகக் கூறினாள் தேவா. பால் இந்த அளவு பிஸ்கட் இத்தனை துண்டு தரவேண்டும் என்று கூறினாள். இராத்திர் வேளையிலே 'மெத்து மெத்து என்ற " துணி போட்டுப் படுக்க வைக்கவேண்டும் தெரிகிறதா என்று கூறினாள். தனபாளர் கூறினதிலே தவறு என்ன! பைத்தியக்காரப் பெண்தானே தேவா! சிங்காரத்தின் நிலை என்ன, நாய் வளர்ப்புக்காகத் தேவா போதிக்கும் முறை அவனால் நடத் தக்கூடியதா? சண்ணிப் பார்த்தாளா? அவள்தான் அவனை, "அவர்” என்று மனதிலே கொண்டிருந்தாளே! ஆகவே அவரால், பாலும் பிஸ்கட்டும், பட்டு மெத்தையும் சம்பாதிக்க முடியும். என்று எண்ணிவிட்டாள்!! பித்தத்தில் ஒருவகைதானே காதல் அந்தப் பித்தமும், ஒரே விநாடி யிலே, ஒரே வாக்கியத்திலே போய்விட்டது தேவாவுக்கு. சிங்காரத்துக்கு தேவாவின் மனநிலை தெரியாது. நாய்க் குட்டியை எப்படி வளர்ப்பது என்று தேவா கூறிமுடித் ததும், சிங்காரம் "அதை எல்லாம் அன்னம் கவனித்துக் கொள்ளும்" என்று கூறினான் புன்னகையுடன். அன்னம் என்ற உச்சரிப்பே புன்னகைக்குக் காரணம் என்பது தேவாவுக்கு விளங்கிற்று. 'அன்னம் யார்?' என்று தேவா கேட்டாள். “ஏன் உனக்குத் தெரியாதா? அவளைத்தான், தை பிறந்ததும் அவன் கலியாணம் செய்துகொள்ளப் போகிறான் என்று தேவாவின் தாயார் கூறினாள். அவன்