பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கற்பனைச்சித்திரம் சங்கத்தலைவர் சேல் விழியாளுடன் போய்விட்டார். போகு முன்பு, அன்னத்தின் அழகை ஒரு முறை பார்த்துவிட்டார்! சிங்காரம், தன் உலகை உணர்ந்து கொண்டான். செல்வவான்களின் வாழ்க்கை அம்சங்களிலே சிலவற்றை யாவது தானும் அனுபவிக்கவேண்டும் என்ற 'வீணான மோகம்' ஏற்பட்டதற்காக வருந்தினான். "கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி" யானதால், வீணான சஞ்சலமே ஏற்பட்டதை உணர்ந்தான்.

நாலைந்து நாட்களுக்குப் பிறகு ஓர் நாள். அருமை நாதன், மோட்டாரை ஒட்டிக்கொண்டு, அந்த வீதிப் பக்கம் வந்தான், சமூக சேவைக்காக அல்ல; அள்ளத்தைத் தரிசிக்கலாம் என்று, "ஜார்ஜ்" கவனிப்பாரற்றுக் கிடந்த சமயம் அது. புழுதியிலே படுத்துக்கிடந்தது. மோட் டாரின் சக்கரத்தில் சிக்கிற்று, நொறுங்கிச் செத்தது: அன்னத்தைப் பிறகு பார்த்துக்கொள்வோம் என்று, அருமைநாதன், மோட்டாரை ஓட்டிக்கொண்டு போய் விட்டான். "அடபாவி" என்று அலறினாள் அன்னம். ஜார்ஜை வாரி எடுத்து அணைத்துக்கொண்டாள். கூக்குரல் கேட்டு உள்ளே இருந்து ஓடிவந்தான் சிங்காரம். மோட்டாரைக் காட்டினாள் அன்னம். பேசாமல், ஜார்ஜை, அன்னத்தி னிடம் இருந்து வாங்கிக்கொண்டான். இரண்டு சொட்டுக் கண்ணீர்விட்டான். உடவிலே சேறு பூசிக்கொண்ட தற்கு உருகிப் போனான் படுபாவி. இப்போது சாகடித்துவிட்டுத் திரும்பிக் கூடப் பார்க்காமல் போகிறான்" என்று கூறி அழுதாள் அன்னம். புறக்கடையிலே ஒரு பள்ளம் தோண்டிப் புதைத் தான் இறந்துபோன ஜார்ஜை மட்டுமல்ல, அன்னத்தின் மீது கொண்ட கோபத்தை, ஆடம்பரப் பிரியத்தை, பழைய நாளைய எண்ணங்களை,