பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலை போச்சு! 37 வேதம் பேதம்

மொய் பொய் என்று பல பிழைகள் ஏற்பட்டுவிட்டன, என் அஜாக் ரதையினால். துண்டு விஷயந்தான் இவ்வளவுக்கும். அதி லும்,எங்கள் ஆசிரியர் மணி மணியாக எழுதுவார் -அதா வது எழுத்துக் கோர்வையாக, அச்சுப் போலவே இருக் கும் விஷயம் இருக்கட்டும், அது தானா முக்கியம், அவருக் குப், பக்கம் பக்கமாக எழுதவேண்டிய வேலை கிடையாது. சுருங்கக் கூறுவதே சூட்சமம் என்பது அவருடைய இலட்சி யம்! பத்திரிகையின் பக்கங்கள், பேனாவின் தயவினாலே அல்ல, காரியாலயக் கத்தரிக்கோவின் கருணையால். அழகாக இருக்கும். "தம்பீ ! இது ஒரு பிரபல திருமணம். அழகாக அச் சிட்டு, இந்த விலாசத்துக்கு ஐம்பது பிரதிகள் அனுப்பி வைக்க வேண்டும். தெரிகிறதா" என்று கூறித் தாளைக் கொடுத்தார். நாளை மறுநாள் வருகிறேன் என்று துணை ஆசிரியருக்குக் கூறினார், துரிதமாக வெளியே சென்றார். தீபாராதனைக்குக் கற்பூரம் சரியாகக் கிடைக்காது கஷ்டப் பட்ட பக்தர்களின் தூதுக் கோஷ்டி, அன்று கலெக்டர் பிரவுன் துரையைக் காணப் புறப்பட்டது. அவர், ஒரு கிராம வைத்தியசாலைத் திறப்பு விழாவுக்குச் சென்றிருந் தார். அந்தக் கிராமத்துக்குக் கிளம்பிற்று தூதுக் கோஷ்டி எங்கள் ஆசிரியர். அந்தத் தூதுக் கோஷ்டிக்குத் தலைவர்! பெயரும் பொருத்தந்தான். அனுமந்தராவ்! அவருடைய திருநாமம்! சில சமயம் வீட்டிலே அவர் சிரமப்படுவ துண்டு, தன் மனைவியைப் பெயரிட்டு அழைக்க அம்மை யாருக்குச் சீதாலட்சுமி என்று பெயர் இருந்தது 11 ஆமாம். இவ்வளவு கூறின நான், பத்திரிக்கையின் பெயரைக் கூற வில்லையே; பாருங்கள் அவ்வளவு மறதி எனக்கு! "வியாசர்" எங்கள் பத்திரிகையின் பெயர்.