பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கற்பனைச் சித்திரம் "வியாசர்" பத்திரிகை ஆசிரியர் அனுமந்தராவ், தன் பாரியை சீதாலட்சுமியிடம் விடை பெற்றுக்கொண்டு, துணை ஆசிரியர் கருடாழ்வார் முதலியாரை நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பிலயர்த்தியதும், கிண்டிக் குதிரைப் பந்தயத்திலே அந்தக் கிழமை ஓடும், அசுவ இலட்சண விளக்கப் புத்தகத்திலே அவர் ஈடுபட்டு, ஆசிரியர் தந்த செய்தியை நான் அவசரத்திலே அச்சுப் பிழையுடன் செய்து கொடுத்தபோது. "ஏண்டா1 தம்பீ! (என்ன எல்லோரும் தம்பி, தம்பி என்று கூப்பிடுகிறார்களே இவன் சிறு பயலோ என்று சந்தேகிக்காதீர்கள். எனக்கு வயது 40 என் பெயர் தம்பி முதலியார்!) சரியாகத்தானே செய் தாய்?" என்று கேட்டுவிட்டு, ஒரு முறை ஒப்புக்கு அதைப் பார்த்து "சரி போடு 1" என்றார். மெஷின், அந்த அயத் தத்தை ஏற்க மறுக்குமா என்ன! அச்சுப் பிழை மட்டுமா. அது எவ்வளவோ, கருத்துக் கோளாறுகளைத் தாங்கித் தாங்கி, உரம்பெற்றதாயிற்றே; அது மள மள வென்று, அடித்துத் தள்ளிவிட்டது. பொழுது பல பலவென விடிந் ததும், பத்திரிகையைப் பார்சல் செய்யும் வேலை மட்மட வென்று நடந்தது. இரண்டாம் நாள் இரவு, தட தடவென்று கதவைத் தட்டினான் ஆபீஸ் பையன். திறந்தேன், திடுக்கிட்டேன்; அவசர அழைப்பு ஆசிரியரிடமிருந்து ஓடினேன், கிடு கிடு வென்று! தம்பி | தலையிலே கல்போட்டாயே !" என்றார் ஆசிரி. யர் அனுமந்தராவ். கருடாழ்வாரைக் காணோம். பத்திரி கைக்கு அவர் கொடுத்த தாளை எடுத்துவரச் சொன்னார். கொண்டு வந்தேன், படி என்றார். படித்தேன். அது இது. பிரபல திருமணம் பலசரக்குக் கடையின்றிப் பிரபஞ்சம் நிலைக்குமா? முடியாது! நமது ஊரிலே பலசரக்குக் கடைகள் பல இருந் தாலும், பண்டரி விலாஸ் கடைக்கு ஈடாகுமா? ஆகாது