பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கற்பனைச்சித்திரம் கொடுமையானது என்று உணர்த்திற்று. உரத்த குரலிலே கூறிவிட்டார். 'உன் கணக்குத் தீர்த்தாகிவிட்டது. வேலைக்கு வேண்டாம் இனி, போ வெளியே" என்றார். வெளியே சென்றேன், வேறென்ன செய்யமுடியும் ! ஒரு துண்டு விஷயத்தை இல்வளவு பிழைகளுடன் வெளியிட் டால். அச்சுக் கோர்ப்பவனுக்கு அச்சகத்திலே, அலுவல் கிடைக்கத்தான் செய்யாது. என்ன செய்வது! ஏக்கம் கொண்டேன் தூக்கம் வரவில்லை. போக்கிடமின்றித் தவித்தேன். வேலை இல்லை என்ற உடனே வேலாத்தா - என் மனைவிக்குக் குல தெய்வத்தின் பெயரையே வைத்து விட் டார்கள் - கொண்ட கோபம் இருக்கிறதே, இவ்வளவு அவ்வளவு என்று சொல்லி முடியாது. "ஒரு நாளைக்கு. ஒரு வேளை சோத்திலே, தப்பித் தவறி ஒரு கல் இருந்து விட்டா. என்னா கோபம் வருது உங்களுக்கு. இத்தனை காலமா அச்சாபீசு வேலையிலே இருக்கறிங்க, இவ்வளவு தப்புச் செய்யறிங்க எவன் கொடுப்பான் வேலை" என்று பேசினாள். பேசினாள் என்று ஒப்புக்குச் சொல்றேன். அவ போட்ட கூச்சல் இருக்கே, வேலாந்தாளே (குலதெய்வம்) வந்தது போலிருந்தது. என்னால் வேதனையைத் தாங்க முடியவில்லை. சே! குடும்ப மும் வேண்டாம். இந்தக்குத்தல் குடைச்சலும் வேண்டாம். பேசாமே சன்யாசி ஆகிவிட வேண்டியதுகான் என்று தீர்மானித்து வேகமாக வீட்டை விட்டு வெளியேறினேன். நடந்துகொண்டேயோசித்தேன். வேலாத்து போல, ஊரிலே எத்தனையோ அம்மணிகள் இருப்பார்களே, அவர்களிடந்தானே போய் பிச்சை கேட் கணுர், "தடியனாட்டம் இருந்துகொண்டு, பிச்சை எடுக்க வந்து விட்டாயா?" என்று ஏசுவார்களே. என்ற பயம் பிறந்தது. சரி நிஜமாகவே சன்யாசி ஆகவேண்டியதில்லை ஒரு நாளைக்காவது, வீட்டுக்குப் போகாமலிருப்போம் வேலாத்தா: "என்னமோ ஏதோ' என்று அழட்டும் என்று எண்ணினேன். எங்கெங்கோ சுற்றி : விட்டு, இரவு பத்து மணி சுமாருக்கு. ஊர்க்கோடி சாவடி