பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலை போச்சு! 41 யிலே போய்ப் படுத்தேன். அரைத் தூக்கம். அந்தச் சம யத்திலே "நமச்சிவாயம் !" என்று சத்தம் கேட்டது. சாவடிக்கு சாமி காவடியானந்தர் வந்தார். நான் படுத் திருந்த மூலையிலிருந்து எழுந்திருக்கவுமில்லை, பேச்சுக் குர லும் கொடுக்கவில்லை, நல்ல வேளையாக அவர் என்னைப் பார்க்கவில்லை. பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற திகில் எனக்கு. 'அடே பயலே! நீ தானே, என்னை,காமி சாவடியானந்தர் என்று அச்சடித்தது' என்று கேட்டு ஏதாவது மந்திரம் போட்டு விட்டால் என் கதி என்ன ஆகும்! நானோ பிள்ளை குட்டிக்காரன்! வாய் திறவாமல் சுருட்டிப் படுத்துக்கொண்டிருந்தேன். ஏன் சாமி!" என்று வேறோர் குரலும் கேட்டது. நான், 'சாமியார், நமசிவாயம்' என்று சொன்னதும், ஆண்டவன் பெயரைச் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அது ஒரு ஆசாமியினுடைய பெயர் என்று அப்போது தான் தெரிந்தது. அவனும் சாமியாரும் ஏதேதோ பேசி விட்டு, அந்தக் கலியாணப் பேச்சையே ஆரம்பித்து விட்டனர். எனக்குப் "பகீர்" என்றாகிவிட்டது சரி, நம்மைத்தான் திட்டப் போகிறார்கள் என்ற நினைப் பிலே, அதற்குதகுந்தப்போல, "வாரு சாமி! பேப்பரிலே, எழுதினவன், தாறுமாறாகர்" என்று வேறு நமசிவாயம் கேட்டுத்தொலைத்தான். சாமியார் சிரித்துவிட்டு, எழுதி எவன் பேரில் தவறு இல்லை. அவனிடம் இருக்கிற கம்பா சிட்டர் ஒரு குருட்டுப்பயல் போலிருக்கு, அவன் அச்சுக் கோர்த்த போது தப்பும் தவறுமாகச் செய்துவிட்டான்” என்றார் சாமியார். சிரிக்கிறீரே சாமி! அந்தப் பயல் செய்த காரியத்துக்கு. என் எதிரே கிடைத்தானானா" என்றான் நமசிவாயம், ஐயோ! வேலாத்தாளின் கோபமே, பரவாயில்லையே, அடிபட்டாலும் வசவு கேட்டாலும், நம்ம மனைவிதானே என்ற சமாதானமாவது இருக்கும். இந்தப் பயல் யாரோ, வழியே போகிறவன், இவனல்லவா ' கருவு கிறான்' என்று தோன்றிற்று என்ன செய்வது. இட பேதம்! பேசாமல் கிடந்தேன். சாமியார் என் பக்கம்