பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கற்பனைச்சித்திரம் பரிந்து பேசலானார்! "அவன் செய்த தவறிலே கூட எவ்வளவோ உண்மை இருக்கிறது நமசிவாயம். உண்மை யைச் சொல்லவேணுமானு. நான், காவடி கைங்கரியம் நடத்தி இந்தச் சாவடியைக் கட்டிச், சாமி காவடி யானந்தர் என்று பெயரெடுத்தேன். அந்தக் கம்பாசிடர் கைதவறுத லாக. காமி சாடியானந்தர் என்று அச்சடித்துவிட்டான். அது ஓன்று தவிர, மற்றது, பெரும்பாலும், உண்மையே தான்! என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நம சிவாயத்துக்கும் அப்படித்தானே இருந்திருக்கும். நான் பேச முடியாத நிலை, அவனுக்கென்ன பயம், பேசினான், கோபமாகவே. 'வேடிக்கை பேசுகிறீர் சாமியாரே! அந்த முட்டாள், விசாலாட்சி விவாகம் என்பதை, விவாகம் என்று அச்சடித்திருக்கிறான், அவனுக்குப் பரிந்து பேசுகி றீர்களே!” என்று கேட்டான். முட்டாளாம், நான் ! என செய்யலாம்! அவளும் அதையேதான் வேறே பாஷையிலே சொன்னாள். உலக்கைக் "உங்க புத்தி இருக்கே. கொழுந்து' என்று சொன்னாள், கோபம் வந்தது எனக்கு, இவன் என்னை முட்டாள் என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறான், போறாத காலம். சாமியார். "நமசிவாயம் விவாகம் என்று அச்சடிப்பதைவிட. விவாதம் என்று அச்சு அடித்ததுதான் பொருத்தம். ஏனென்றால்; இந்தக் கலியா ணம், வீசலாட்சிக்குக் கொஞ்சம் கூட இஷ்டம் கிடையாது. அவள் தாயாரிடம் இதுபற்றி விவாதித்தாள். புத்தி சொல் லப்போன என்னிடங்கூட விவாதித்தாள். ஆகவே, அவன் . விவாகம் என்பதை விவாதம் என்று அச்சடித்தது; உண்மை, அவன் கை தவறுதலாலே, வெளிவந்தது என்று தான் அர்த்தம்," என்றார். "ஏன் விசாலாட்சிக்கு இஷ்டம் இல்லை?” என்று கேட்டான் நமசிவாயம். சாமியார் கேட்டார், 'மாப்பிள்ளை பெயர் என்ன?” என்று. 'மணி. அரசு" என்றான் நமசிவாயம். அதைத்தானே அந்தப் பயல் "பீணி அரசு" என்று அச்சடித்தான் என்று கேட் டார் சாமியார். அதற்காகத்தான் அந்தப் பிரகஸ்பதியைப் பாராட்டுகிறீரா? என்று நமசிவாயம் கேட்டான். சாமியார் அவன் கை தவறி, மணி அரசு என்பதை பிணி அரசு