பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலை பேச்சு! 43 என்று அச்சுக் கோர்த்தான். ஆனால் தெரிந்தே அப்படி அச்சடித்தாலும் தவறு இல்லை. ஏனென்றால் உண்மையி லேயே மாப்பிள்ளை நோயாளிதான். அவனுக்குக் காமாலை வியாதி' என்றார் சாமியார். நான் பூரித்துப்போனேன். "நோயாளியை மணம் செய்துகொள்ளும் பெண்ணின். பெயர் விசாலம் என்று இருந்தால் என்ன, அவன் தவறாக அச்சடித்தானே விசாரம் என்று, அது தான் பொருத்தம் என்று சாமியார் கூறினார். நமசிவாயத்தின் வாய் அடங்கி விட்டது. எனக்கோ துடிதுடிப்பு] எழுந்து போய் சாமியார் காலிலே விழவேண்டும் என்று. அடக்கிக்கொண்டு படுத் திருந்தேன். "யோசிக்கப்போனால் அந்தக் கம்பாசிட்டர் செய்தது ஒன்று கூடத் தவறு கிடையாது." காசு மாலை மாப் பிள்ளை போட்டது, அவன் காமாலைக்காரன், ஆகவே காசு மாலை என்று அச்சிடாமல், காமாலை என்று அச்சிட்டதிலே எழுத்திலே பிழையே தவிர உண்மையிலே, பிழையல்ல. வேதம் என்பதை பேதம் என்று அச்சடித்தான். வேதம் உண்மையிலேயே, ஜாதி குலம் முதலிய பேதத்தை ஏற் படுத்தத் தோன்றியதே. அது மட்டுமில்லை. அன்றுவேதம் ஓதினார்களே பார்ப்பனர்கள், அவர்கள் ஓதியது, சரியான வேதமல்ல, ரொம்ப ரொப்பப் பேதம் இருந்தது. அந்த அரைகுறை ஆசாமிகளின் வேத பாராயணத்திலே. மொய் எழுதினாரே. அதிலே பெரும்பகுதி பொய்தான் வெறும் கௌரவத்துக்காக், எந்தெந்த ஊரிலிருந்தோ யாராரோ', ஐம்பதும் நூறும் மொய் அனுப்பினதாகப் பொய் சொன் னார், ஆகையால், மொய் என்பதற்குப் பதில் பொய் என்று அச்சடித்ததும் சரியே!' என்றார் சாமியார் நமசிவாயத்தின் கோபம் என் மீது இருந்தது போய்விட்டது. முகுந்தராஜ முதலியார் மீது பாய்ந்தது. 'பெண்ணை ஒரு நோயா ளிக்கா கலியாணம் செய்துகொடுத்தான் பாவம்! அந்தப் பெண் வேண்டாமென்று மறுத்துமா அதன் தலையிலே அந்தக் காமாலைக்காரனைக் கட்டி வைத்தான் '" என்று நம