பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கற்பனைச்சித்திரம் அதிகாரக் குரலிலேயே, "வேலாத்தா! வேல்! வேலா! டீ, வேலாத்தா!" என்று பல ரகத்திலே, பல சுருதியீலே கூப் விட்டேன். எனக்கென்ன பயம், எட்டு ரூபா இருக்கு அந்தக் கொட்டை கட்டி கொடுத்த பணம். ஏது அதி காரம் தெருவே தூக்குது" என்று அர்ச்சனை செய்து கொண்டே கதவைத் திறந்தாள் வேலாத்தா; வழக்கமாகப் பயத்தைக் காட்டும் என் கண்களிலே அதிகாரப் பார்வை யைக் கண்டாள். அவளாலே கோபத்தை அடக்க முடிய வில்லை. வேலை போச்சின்னு கொஞ்ச கலை இருக்குதா உனக்கு விடிய விடிய ஊர்சுத்திவிட்டு வர்ரயே" என்றாள். 64 சீ9 கழுதே! வேலை போச்சாம் வேலை! வேளைன்னு சொல்லுடி! நமக்கு இருந்த போறாத வேளை போச்சுன்னு சொல்லு" என்று கூறிக்கொண்டே எட்டு ரூபாயைக் கொட்டினேன்! அவள் பார்த்த பார்வை இருக்கே, என்னவென்று சொல்லுவேன்! நாளைக்கு வேலைக்கும் போவேண்டி !'" என்றேன். ஏன்? எப்படி ஏது? என்று அவள் எத்தனையோ தடவை கேட்டாள். ரொம்ப காலத்துக்கு முன்னாலே கொஞ்சுவாளே."ராசா இல்லை! கண்ணு இல்லை!" என்று, அந்த பழையது கூடப் போட்டாள். கடைசியில் பூராவிஷயமும் சொன்னேன். அவளுக்கு வந்த சந்தோஷத்திலே - வெட்கமாகக்கூட இருக்கும் சொல்ல - குமரி போல - என்னையும் புதுமாப் பிள்ளைக் கோலத்திலே இருப்பதுபோலவே - எண்ணிக் கொண்டு "அடஎன். ராசா!" என்று சொல்லி.... ஒரு முத்தம்கூடக் கொடுத்தாள்!!