பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசங்க பூஷணம்! பிரசங்க புக்ஷணம், புலவர் பூலோகநாதர், அன்று பட்டம் சூட்டிக்கொள்ளப்போகும் பார்த்திபன் போலக் காணப்பட்டார். காரணம் உண்டு அவருடைய களிப்புக்கு. அன்று மாலை ஆலமரத்தடியார் கோயில் ஆறுகால் மண்ட பத்திலே, அவருடைய சொற்பொழிவு ஏற்பாடாகி இருந்தது! மட்டும், "குறும்புக்காரச்சிறார்கள். இன்று மாலை என்னைக் கண்டால், என்மொழி கேட்டால், மறுதினம் முதற்கொண்டு, மறந்தும், சேட்டை செய்யார். ஊர்ப் பிரமுகர்கள் பலருமன்றோ கூடி இருப்பர். என் புகழை எடுத்துரைப்பர். மாலை அணிவிப்பர், கைகொட்டி மகிழ் விப்பர், மகிழ்வர். இவைகளைக் கண்ட பிறகு காளைகளின் கண்கள் திறக்கும்" என்று புலவர் எண்ணிக்களிப்படைந் தார். அவருடைய சந்தனப்பொட்டு முதற்கொண்டு, சங்கராபரணம் வரையிலே சகலமும், பள்ளிக்கூடச் சிறார் களுக்கு, நகைச்சுவை தருவளவாக இருக்கும். தொல்லை அதிகம். எனவே பிரசங்கபூஷணம், அறியதோர் சொற் பொழிவு செய்து, அதன் மூலம் புகழ் ஈட்டி, ஈட்டிய புகழை