பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசங்க பூஷணம் ! ற 53 "தம்பி!" என்று கூறினார் புலவர். சீடர் எழுதப் போந் தார்." எழுதாதே! இது எழுதுவதற்கல்ல, உனக்குக் கூறுகிறேன். ஒரு சொற்பொழிவின் இலட்சண விளக்கத் தைக்கேள். எந்த விஷயத்தைப்பற்றிப் பேசவேண்டு மென்று குறிக்கப்பட்டிருக்கிறதோ. அவ்விஷயத்தைப் பற் றியே மறந்து, வீணான அவையடக்கம், சபை வணக்கம் கூறிக் காலத்தைக் கொலைசெய்வது இருக்கிறதே, அது கொடிது,மகாகொடிது. அவை அடக்கம் என்ற பகுதியை அதிகமாக வளர்த்தக்கூடாது. என் சொற்பொழிவிலே நீ எப்போதும் கூர்ந்து கவனித்தால் ஒரு முக்கியமான விஷ யத்தைக் காணலாம். அதுதான், என் அனுபவத்தின் ஆராய்ச்சியின் விளைவு என்னவெனில், நான் அனாவசிய மாக அவை அடக்கம் கூறிக் காலத்தை வீணாக்கமாட்டேன்" என்று கூறினார். நாவை அடக்கி வைக்கவேண்டிய நிர்ப் பந்தத்திலே இந்த சீடன், அவை அடக்கத்தை நீட்டிச் சொல்வது கூடாது. என்ற விஷயத்தையே, பிரசங்க பூஷணம்,நீட்டிக்கொண்டு, நேரத்தை வீணாக்கிச் சொற் பொழிவுக்கேற்ற விஷயத்துக்கே. வராமலிருக்கிறாரே என்று தெரிந்தது, கூறமுடியுமா! கூறுவது, முறைக்கே பங்கமன்றோ! குரு சீட இடையே பேசிவிட்டதால், தொடர்பு மறந்துபோகவே மீண்டும் ஒருமுறை எழுதின வரையிலே படிக்கச்சொல்லிக் கேட்டார் பிரசங்க பூஷணம். அந்தணர் என்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க் கும் செந்தன்மை பூண்டொழுகலான் இந்த வாசகத்தை, மணிவாசகம் என்பேன், அணிவாசகம் என்பேன், பணி வாசகமுமாகும், அறநெறியும், அன்புநெறியும். கொண்ட வர் அந்தணர், அழகிய தன்மையை உடையவர், அவர் கள் எல்லா உயிரிடத்தும் அன்பு காட்டும் தகைமையினர், அவரே அந்தணர். "ஐயகோ! அந்தணர் என்போர், நம்மனோரைக் கெடுப்பவர் என்றோர் சாரார் கூசாது பொய் கூறுகின்ற