பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசங்க பூஷணம்! 57 வில்லை. ஆனால் மனதிலேமட்டும் "கூறாமற் சன்யாசம் கொள் ” என்ற வாசகம் குடியேறிக் குடையலாயிற்று. "குப்பையாம்! கம்பன் கோர்த்த இம்மணிகள் குப்பை யாம் 5 என்று தனக்குள் கூறிக்கொண்டே பிரசங்க பூஷணம், புத்தகங்களின்மீது படிந்திருந்த தூசைத்தட்டிக் கொண்டிருந்தார். "தங்களைக் காண ஐயர் வந்திருக்கிறார்" என்று சீடன் தெரிவித்தான். ஓடோடிச் சென்றார். அருணாசல ஐயர் கூடத்திலே இருக்கக்கண்டு, "மாலை ஆறுமணிக்குத் தானே. இதற்குள்ளாகவா? நான் இன்னும் குறிப்புத் தயாரித்து முடிக்கவில்லையே" என்று கூறினார். அவசரம் வேண்டாம். நிதானமாகவே தயாரிக்கலாம்" என்றார் ஐயர். அப்போதுதான், பிரசங்க பூஷணத்துக்கு நிம்மதியாயிற்று. பிரசங்கத்திலே இன்னும் குறள், நாலடியார், நன்னெறி, தேவார திருவாசகம், பட்டினத் தார் பாடல், தாயுமானார் பாடல் ஆகியவைகளை எங் கெங்கே புகுத்துவது என்றே தீர்மானிக்கவில்லை பிரசங்கத் துக்குரிய விஷயம் என்ன என்பது மறந்துவிட்டது. எந்த விஷயம் பற்றிப் பேசவேண்டுமெனக் குறிக்கப்பட்டிருந்தது என்பதை அறியத்தான் அந்தப் பச்சைத் துண்டுக் கடிதத் தைத் தேடிஜர் அந்தப் பாழாய்ப்போன கடிதம் காண வில்லை. இந்த நேரத்திலே ஐயர் வந்தால், பிரசங்க பூஷணம் பயப்படாமலிருப்பாரா! நல்லவேளை, அவசரம் இல்லை என்று கூறிவிட்டார். ஆகவே, அருமையாகத் தயாரித்துவிடலாம் பிரசங்கத்தை என்று மகிழ்ந்தார் "தலைவர் தயாராகத்தானே இருக்கிறார்?" என்று கேட்டார் ஐயரை, " நல்லகேள் வி கேட்டீர்கள். அவர் துடிக்கிறார்." என்றார் ஐயர். அட்பார் நமது ஜெமீன் தாரர் நிரம்பத் தமிழ் அறிவு அன்புபடைத்தவர். கவிதா உள்ளம் அவருக்கு" என்று அன்று தலைமை வகிக்க இருந்த ஆலூர். ஜெமீந்தாரரைப் பாராட்டிப் பேசினார் பிரசங்க பூஷ்ணம், பேசியபோதே அவர் முகத்திலே கொஞ்சம் பயம் தட்டிற்று. "அட்டா என்ன காரியம் செய்துவிட்டோம். முட்டாள் தனமாக காரியமல்லவாசெய்தோம், பிரசங்