பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கற்பனைச்சித்திரம். வீட் பேசிப் பேசி, தொண்டையைக் கூடப் புண்ணாக்கிக் கொள் வான் போலிருக்கிறது. ஏனம்மா? இவனுக்கு இந்தக் கஷ் டம்? இவன் தலையிலே நல்ல எழுத்து எழுதி இருக்க, எதற் காக இவன் அலைந்து கொண்டிருக்கவேண்டும்? டோடு, நிம்மதியாக இருக்கக்கூடாதா" என்று, பூபதியின் தாயார் வருத்தப்பட்டுக்கொண்டார்கள். எப்போது பார்த்தாலும் பூபதி வெளியே சுற்றிக்கொண்டே இருப் பதைக்கண்டு தாய்க்கு, மகன் இப்படி அலைந்து உடம்பைப் பாழாக்கக்கொள்கிறானே என்று சோகம், அவர்களுக்கு கென்ன தெரியும், மகன், உல்லாச வேட்டையாடுகிறானே தவிர, ஊருக்கு உபகாரம் செய்ய ஒரு துளியும் வேலை செய்யவில்லை என்பது. அலைந்து தீரவேண்டும். திரிந்து கிடக்கவேண்டும், பாடுபட்டுப்பணம் தேடியே, ஜீவித்தாக வேண்டும் என்ற நிலையில் பலர் இருப்பதற்குக் காரணம். அவர்கள் தலையிலே ஆண்டவன் அப்படி எழுதினான், என் பது மிட்டாதாரணியின் எண்ணம், மகன் ஏதோ பாடுபடு கிறான் மற்றவர்களுக்காக என்று வருத்தப்பாட்டார்கள் அந்த அம்மையார். இரவெல்லாம் குடித்து விட்டு கிடப்ப தால், பூபதியின் உடல் இளைத்தது, அதை அம்மையார். மகன் ஊருக்கு உழைத்து அப்படியானான் என்று எண்ணிக் கொண்டார்கள்.: "உன் அந்தஸ்த்துக்கும், செல்வத்துக்கும்" இது ஒரு பிரமாதமா? நேற்றுத் தோன் றியவர்களெல்லாம், ஷெவர் லேயில்' போகும்போது; நீ ஏன் 'ரோல்ஸ்ராயில்' போகக் கூடாது? அந்தப் பயல், 'ரேஸ் கிளப்பிலே. ஆயிர ரூபாய் நோட்டை அல்ட்சியமாக வீசி எறிகிறான், நூறு ரூபாய் நோட்டு எடுப்பதென்றால் உனக்குக் கை நடுக்கம் பிறக் கிறது. உன் அந்தஸ்துக்கு ஏற்றபடியா உடை இருக் கிறது?'ட்வீட்' இல்லாமல், டாக்டர் தாமோதர் வெளியே கிளம்புவதில்லை, உன் உடையைப் பார் ! சேச்சே! என்ன. இருந்தாலும், நீ இப்படி உன்னுடைய செல்வநிலைக்குக்